Sunday, November 20, 2016

மோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்


மோடி 8ந் தேதி இரவு இந்தியாவில் இருக்கும் பாமர மக்களின் தூக்கத்தை கெடுத்தார் மோடி.
அன்று முதல் வங்கியிலும், ஏடிஎம் லிம் காத்திருந்து தவிக்கிறார்கள்.

நாட்டில் எல்லாரும் பணம் இல்லாமல் துன்பப்பட்டு இருக்காங்க.
ஒரு சில பேர் திருமணங்கள் மற்றும் சுப காரியங்களை தள்ளி வைத்து விட்டார்கள்.

ஊழலையும், கறுப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க தான் மோடி இந்த
திட்டத்தை கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்கிறார். ஆனால், தன் கட்சியில்
உள்ள ஊழலையும், கறுப்பு பணத்தையும் அவர் ஒழித்தாரா என்ற கேள்வி
ஏழாமல் இல்லை. மக்களுக்கு சிரமம் இருக்கிறது, கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ள
வேண்டும் என்று மோடி சொன்னார். ஆனால், சிரமம் மக்களுக்கு தான்.
அவரின் கட்சிகாரர்களுக்கு இல்லை என்பது இப்போது நான் சொல்லப்போகும் செய்தியில் தெரியும்.

கர்நாடகம் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பிரபலமானவர்கள் ரெட்டி சகோதரர்கள்.
தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என ஆடம்பர வாழ்கை வாழ்பவர்கள். இவர்களின் சொத்து மதிப்பு எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.
சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர்.
இந்த சகோதரர்கள் மிதுமீது சட்டத்திற்கு விரோதமாக சுரங்கங்களை வெட்டி எடுத்தார்கள் என்ற வழக்கும், கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக்கினார்கள்
என்ற வழக்குகள் உட்பட ஏராளானமான வழக்குகள் இருக்கிறது.

இவரது மகளுக்கு இன்று (16-11-2016) திருமணம் நடக்கவிருக்கிறது. மோடி கலந்து கொள்ள்வில்லை என்றாலும்,
அவர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை ஒளிப்பரப்ப போகிறார்கள். அதாவது, மோடியின் ஆசியுடன் இந்த திருமணம் நடக்கிறது.
பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்

அப்படி என்ன விசேஷம் இந்த திருமண விழாவில் இருக்கிறது என்று பார்ப்போம்.

திருமண அழைப்பிதழில் இருந்து பிரமாண்டம் தொடங்குகிறது.

எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும்
குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ரெட்டி சகோதரர்களது மாளிகை, கோவில், மணமக்களது அறிமுக சீன் என்று கிட்டத்தட்ட
ஒரு முழு சினிமாவை போல் காட்சிகள் வருகிறது.
ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000.
கிட்டத்தட்ட ஒரு மினி டி.வியையே அளித்திருக்கிறார்கள்.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள்.
பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள்.

மணமகன் மற்று மணமகளுக்கு பங்களா செட்டுகள் மட்டும் 36 ஏக்கரில் போடப்பட்டது.
உணவருந்துவதற்கு பெல்லாரி கிராமங்களை போன்ற செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 12 முதல் 15 வரை இரவுகளில் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

முக்கிய விருந்தினர்களை அழைத்துச் செல்ல  மாட்டு வண்டிகள் போன்று வடிவமைக்கப்பட்ட சொகுசு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரூவின் முதல்தர ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் மட்டும் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. திருமண மைதானத்தில்
ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவதற்காக 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்திருமணத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.
இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க-வின் பெல்லாரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீராமுலு சுமார் 50,000 பேர் நிகழ்வுக்கு வருவார்கள் என தெரிவித்தார்.
ரூபாய் நோட்டை மாற்றுவதில், தன் தொகுதி மக்கள் சொல்ல இயலாத சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறார் தேசபக்தி கொண்ட பாரதிய
ஜனதா எம்.பி sriramulu.

தேசத்தின் நலம் தான் முக்கியம் என மோடி கூறியதால்
நாட்டு மக்கள் பணமில்லாமல் அதற்கு தீர்வும் தெரியாமல் அலையும் போது பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இத்தகைய தேசபக்தி வேலைகளை செய்து தமது பெயரை நிலைநாட்டுகிறார்கள் என்பது குறிப்பிட்த்தக்கது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 1000 மேலாளர்கள், 2500 மேற்பார்வையாளார்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்

இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய்.
மக்கள் பணம் இல்லாமல் தவிக்கும் வேளையில் இவர் கையில் எப்படி இவ்வளவு பணம்.
அனைத்தும் வெள்ளை பணமா, அனைத்து பண பரிமாற்றங்களும் வங்கி மூலம் நடந்ததா?
இவ்வளவு பணம் புழங்கும் விழாவில், ஏன் வருமான வரி துறை சோதனை நடத்த வில்லை.

காரணம் என்னவென்றால் ரெட்டி சகோதர்கள் பிஜேபி காரர்கள்.
கடந்த பத்தே ஆண்டுகளில், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி அமைக்கும் அளவுக்கு சென்றதற்கு, இவர்களின் பண பலம் தான் முக்கிய பங்கு ஆற்றியது.
மேலும் இவர்கள் மோடியின் நெருங்கிய நண்பர்கள்.
அதனால், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

முதலாளிகளின் கருப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி இந்த செல்லாத நோட்டு நாடகத்தை நடத்துகிறார் என்பதற்கு ரெட்டி சகோதர்களே சாட்சி!
அவர்களது திருமணமே காட்சி!

மோடி அவர்களே, உங்களின் கட்சியில் இருக்கும் கறுப்பு பண முதலைகளை நன்றாக பாதுகாக்கும் நீங்கள்,
பாமரனின் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள்.
நாட்டின் கள நிலவரம் தெரியாமல் வெளிநாடுகளில் உட்கார்ந்து கொண்டு மோடியின் திட்டத்தை ஆதரிக்கும்
மோடியின் பக்தர்களே, இதற்கும் நீங்கள் ஏதாவது சொல்லி மோடியை காப்பாற்றுவீர்கள் என்பது தெரியும்.
அந்த கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot