Thursday, November 24, 2016

கலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே?

கருணாநிதி அவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லை. அவர் கட்சிக்காரர்கள் யாரையும் சந்திக்கவில்லை.
அவரது உடல் முழுவதும் சிறிய கொப்பளங்கள் ஏற்பட்டதால் அவரது கோபாலபுரம் வீட்டில் சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார்.
உடல்நலம் சரியாக இல்லையென்றாலும், தேவைப்படும் நேரத்த்ல் அவர் தவறாமல் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் லண்டன் டாக்டர் அவர் உடலை பரிசோதித்து சிகிச்சைக்கு ஆலோசனைகள் அளித்ததாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் அவர் திமுக பொதுச்செயலாளரும் தனது நெருங்கிய நண்பருமான அன்பழகன் அவர்களை அழைத்து
பேசினார். அந்த போட்டோ வெளியாகி இருக்கிறது. ஒரு மாதமாய தலைவரை காணாத கட்சிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதிமுக தொண்டர்கள் இன்னும் குழப்பத்தில் தான் உள்ளனர்.
முதலமைச்சர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதம் ஆகி விட்டது, இன்னும் போட்டோவும் வரவில்லை. வீடியோவும் வரவில்லை.
எப்போது வீட்டுக்கு வருவார் என்ற சரியான தகவலும் இல்லை.

கடைசியாக ஆக்டோபர் 21ம் தேதி தான் அப்பல்லோவிடம் இருந்து எழுத்துபூர்வமான அறிக்கை வந்தது.
அதன் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை.

அதன் பிறகு மூன்று முறை வாய்வழியாக அப்பல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதலமைச்சரின் உடல்நிலை பற்றி கூறினார்.
முதல் இரண்டு முறை ஒரே மாதிரியான செய்தி தான். ஜெயலலிதா பரிபூரணமாக குணம் அடைந்து விட்டார்.
அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

மூன்றாம் முறை அவர் கருத்தில் மாற்றம் இருந்தது.
ஜெயலலிதா பரிபூரணமாக குணம் அடைந்து விட்டார். எனினும் ஏழு வாரம் வரை மருத்துவமனையில்
இருக்க நேரிடும் என்றார்.

சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா CCU வில் இருந்து ICU விற்கு மாற்றுப்பட்டார்.
இரண்டிற்கும் பெரிதாக எந்த வித்தியாசம் இல்லை. இன்னும் நார்மல் வார்டுக்கு மாற்றவில்லை.
அதற்கே அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

அப்பல்லோ மர்மம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஜெயலலிதாவை மருத்துவமனையில் சசிகலா வைத்திருப்பாரா
என்ற சந்தேகமும் எழுகிறது.

ரூபாய் நோட்டு பிரச்சனையால், எல்லாரும் முதலைமச்சரை மறந்து விட்டோம்.
சாப்பாட்டுக்கே வழியில்லாத போது முதல் அமைச்சராவது, இரண்டாவது அமைச்சராவது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot