Wednesday, November 23, 2016

மோடிக்கு 92% மக்கள் ஆதரவு

மோடி அவர்கள் 500,100 ரூபாய் செல்லாது என்று 8ம் தேதி அறிவித்தார்.
மக்களின் மனநிலையை அறிவதற்காக தன்னுடைய மொபலை ஆப்பில் 10 கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பில்
பங்கேற்குமாறு மக்களிடம் டிவிட்டரில் அழைப்பு விடுத்தார்.

500,1000 செல்லாது என்ற திட்டத்தில் பாதிக்கப்பட்ட்வர்கள் 134 கோடி மக்கள்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 24 கோடி மக்கள்.
அதில் இண்டர்நெட் வைத்திருப்பவர்கள், மொபல் ஆப் பயன்படுத்த தெரிந்தவர்கள், அதிகபட்சம் 80 சதவீதம் பேர்.
அதாவது 19 கோடி மக்கள்.

மோடியின் மொபலை ஆப்பை இதுவரை டவுன்லோட் செய்தவர்கள், 10 லட்சம் பேர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே இந்த ஆப் வைத்திருந்தார்கள். அதாவது மோடியின் அபிமானிகள்.
இந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் அளித்தவர்கள் 5 லட்சம் பேர்.
இது பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 0.0007 விழுக்காடு தான்.

அதில் 93 சதவீத மக்கள் இந்தியாவில் உள்ளவர்கள் என்று சொல்கிறார்கள்.
அந்த ஆப்பில் டிபால்ட் ஆக இந்தியா என்று வைத்துள்ளார்கள்.
ஐபி ஆட்ரஸ் மூலம் எந்த நாடு என்று டிராக் செய்கிறீர்களா என்று தெரியவில்லை.

30 சதவீதம் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள்.
6 லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கிறது. வங்கிகளும், ஏடிஏம் களும் மிக குறைவான அளவில் தான் இருக்கிறது.
அங்கு தான் பாதிப்பு அதிகம்.
இவர்களின் எண்ணங்களை ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை.
பிரதமர் மோடியும் இவர்களை பற்றி கவலைப்படுவதாய் தெரிவதில்லை.

இதில் நான் அளித்த பதில்களை சுருக்கமாய் சொல்கிறேன்.

1. இந்தியாவில் கறுப்புப் பணம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் தான் கறுப்பு பணம் இருக்கிறது.
நம் மக்கள் தொகையில் இவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர். அவர்களும் பெரும்பாலானோர் தங்கமாகவும், சொத்தாகவும்,
வெளிநாட்டு வங்கி கணக்காகவும், வெளிநாடு சொத்துகளாகவும் மாற்றி விட்டார்கள்.
25 %  மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு 32 ரூபாய் பணம் கூட பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

2. கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட வேண்டும், அதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆமாம்.

3. ஒட்டுமொத்தமாக, கறுப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியாவின் பெரும்பாலான கருப்பு பணம் 1% சதவீதத்திற்கும் மறைவான மக்களிடம் தான் உள்ளது.
அதற்காக அனைவரையும் தேச நலன் என்ற பெயரில் தண்டிப்பது மனிதாபிமானமற்ற செயல்.

4. லஞ்சம், ஊழலுக்கு எதிரான, பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் ஆட்சிக்கு வந்து 2.5 வருடங்கள் இருக்கிறது. ஏன் லோக்பால் பாராளுமன்றத்தில் முடங்கி போய் இருக்கிறது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக எந்த கடுமையான சட்டமும் நிறைவேற்றவில்லை.
அதனால் லஞ்சம், ஊழலுக்கு எதிராக இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

5. 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் வீட்டில் சேர்த்து வைத்த பணம் வங்கிக்கு வரும்.
பல நடுத்தர குடும்பத்து பெண்கள், வீட்டில் சேர்த்து வைத்து பணம் வரிக்கு உட்படும்.
அரசுக்கு வருவாய் கிடைக்கும். வேறு எந்த பயனும் எனக்கு தெரியவில்லை.

6. சில நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பால், கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியாது

7. செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், ரியல்எஸ்டேட், உயர் கல்வி, மருத்துவம் ஆகியவை, சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் ஏற்படுமா?
கல்வி மற்று மருத்துவம் பெரும்பாலும் தனியார் துறையிடம் தான் இருக்கிறது.
ஏன் அரசு பள்ளிகளையும், அரசு மருத்துவமனைகளையும் அரசு கவனிக்காமல், தனியாரை வளர்த்து விட்டது?
இப்போதும் செல்லாத நோட்டு அறிவிப்பால் இதில் மாற்றம் ஏற்படாது. ஆட்சியில் உள்ளவர்கள் தனியார் நிறுவனங்கள் மீதுள்ள விசுவாசத்தை குறைத்து,
அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் கொண்டுவர வேண்டும்.

8. ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான நடவடிக் கைகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் சொல்லும் மூன்றும் இந்த திட்டத்தால் அழிய போவதில்லை.
நகரத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு சிரமங்கள் இல்லை. ஆனால், மற்றவர்கள் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், எண்ணற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
மக்கள் கொலை செய்தால் தண்டனை. அரசு கொலை செய்தால் யார் தண்டனை கொடுப்பார்கள்?
நிறைய மக்கள் வருமானமே இல்லாமல், வெறும் வயிற்றுல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர்கள் பசி தாங்கலாம். சின்ன குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.
அவர்களிடம் தேச நலனுக்காக சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

9. தற்போது போராட்டங்கள் நடத்தி வருபவர்கள் உண்மையில், கறுப்புப் பணம், ஊழல், பயங்கர வாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத் துடன்தான் போராட்டம் நடத்துகின்றனர் என, நம்புகிறீர்களா?
இதை மூன்றைய்ம் ஒழிக்க வேண்டும் என்பது அந்த அரசியல் கட்சிகளின் கொள்கை இல்லை.
மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குரலையே இந்த கட்சிகள் எதிரொலிக்கிறார்கள்.
உங்களின் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பது நிச்சயம் தவறான செயல்.

10. பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடம் கருத்துகள், ஆலோசனை கள், யோசனைகள், திட்டங்கள் உள்ளனவா?
வேறு பல வழிகளிலும் மக்களிடம் நீங்கள் கருத்து கேட்க வேண்டும்.
ஏனென்றால், மிக சிறிய மக்கள் தான் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அதிலும் சிலர் தான் மொபைல் ஆப் வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot