Sunday, November 20, 2016

மக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்

நவம்பர் 8ம் தேதி பிரதமர் 500, 1000 ரூபாய் செல்லாது என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை
இரண்டு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
ஆகஸ்ட் மாத டெபாசிட்டை விட 6 லட்சம் கோடி அதிகமாய டெபாசிட்
ஆகி இருக்கிறது.

அருண் ஜெட்லி என்ன சொன்னார், “7வது ஊதியக்குழு அறிக்கை அமல்படுத்தியதால்
தான் அதிக பணம் டெபாசிட் ஆனாது என்றார்”. சில மாதங்களுக்கு முன்னர்,
7வது ஊதியக்குழுவை அமல்படுத்துவதால் அரசுக்கு 1.02 லட்சம் கோடி செலவாகும்
என்றார்.”. அதை கழித்தால் கூட 5 லட்சம் கோடி அதிகமாய டெபாசிட் ஆகி இருக்கிறதே?
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரிய தொகையாய் இருக்கிறதே?

ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியானது. பிஜேபி காரர்களுக்கும், செல்வந்தர்களுக்கும்
500,1000 செல்லாத விஷயம் பற்றி முன்னரே தெரியும் என்று விவரம் முன்னரே தெரியும் என்று சில அதாரங்கள் வெளியானது.
அதோடு இதுவும் ஒரு பலமான ஆதாரம்.

பிரதமரா இதை பற்றி யாருக்கும் தெரியாது என்றும், கறுப்பு பண முதலைகளால் தனது உயிருக்கு ஆபத்து
என்றும் கூறி கண்ணீர் விடுகிறார். இது ஒரு பொய்யான கண்ணீர் என்பதற்கு இந்த ஆதாரம் போதாதா?
அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் ஏற்கனவே தங்கள் பணத்தை பத்திரமாக டெபாசிட் செய்து விட்டார்கள்.
கறுப்பு பணத்தை பிடிக்கிறேன் என்று ஏழைகளின் சுருக்கு பையில் தான் இப்போது கை வைத்து இருக்கிறார் மோடி.
எத்தனை நாட்களுக்கு தான் நீங்கள் படித்த மக்களை ஏமாற்றுவீர்கள் என்பதையும் பார்க்கலாம்.

எங்க வீட்ல கடுகு டப்பாவில் பணம் இருப்பது உங்கள் கண்களை பறிக்கிறதா? தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி வராகடனை பார்த்து எங்கள்
நெஞ்சே வெடிக்கிறதே. அதை உங்களால் வசூல் செய்ய முடியுமா?
யோக்கியர்கள் போல் வேஷம் போட்டு கொண்டிருக்கும் மோடியின் கூட்டம் கொள்ளையில் காங்கிரசையே மிஞ்சுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot