Sunday, November 20, 2016

500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு ? பகீர் தகவல்

புது 500, 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் கள்ள நோட்டுகள் அழியும்.
இதில் பாமரன் எவ்வாறு பாதிப்படைகிறான்

ஒருவன் 10,000 ரூபாய் வங்கிக்கு எடுத்து செல்கிறான்.
அவனிடம் இருக்கும் அனைத்தும் கள்ள நோட்டு என்று சொல்லி அவனுக்கு ஒரு பைசாவும் கொடுக்காமல்
அவன் விவரங்களை வாங்கி, அவனை ஒரு திருடன் போல் நடத்தி அவனை அனுப்பி வைக்கிறார்கள்.
எவனோ கள்ள நோட்டு அடிச்சி பரப்பி விடறான். அவங்கள பிடிக்க நாதி இல்லை?
பாமரன் தான் எப்பவுமே பாதிப்பு அடையனுமா?
எது நல்ல நோட்டு, எது கள்ள நோட்டு என்பதை புரிந்து கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தீர்களா?
பணத்தை வாங்குவதற்கு முன், அது நல்ல நோட்டா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தீர்களா?
உங்கள் கடமையை எதுவுமே செய்ய மாட்டீர்கள். ஆனால், தண்டனை பாமரனுக்கா?

ஒரு அரசியல்வாதிக்கு ஊழல் வழக்கில் தண்டனை என்றால், பாமரன் பயன்படுத்தும் பேருந்தை எறிக்கிறார்கள்.
பாமரன் வைத்திருக்கும் சிறு கடைகளை உடைக்கிறார்கள், எறிக்கிறார்கள்.

எவனோ ஒரு சமூக விரோதி ஒரு கட்சிகாரனை கொன்றாலும், பாதிப்பு பாமரனுக்கு தான்.

எவனோ கள்ள நோட்டு அடிச்சி பரப்பி விடறான். பாதிப்பு பாமரனுக்கு.
எவனோ ஒரு சிலர் கறுப்பு பணம் வச்சிருக்கான். பாதிப்பு பாமரனுக்கு.
சில பேரிடம் உள்ள கறுப்பு பணத்தை உங்களின் உளவுத்துறையை வைத்து கண்டு பிடிப்பது சரியா?
அல்லது 125 கோடி மக்களை பாதிப்படைய செய்வது சரியா?
உங்கள் உளவுத்துறையின் திறமை இவ்வளவு தானா?

புது நோட்டு கள்ளநோட்டை கட்டுபடுத்துமா. கள்ள நோட்டு அடிக்க முடியாதபடி ஒரு நோட்டை உருவாக்க தெரியவில்லை.
உங்களின் கையாலாகாத செயல்களுக்கு, பாமரர்களுக்கு தண்டனையா?

படிப்பறிவில்லாத முதியவர்கள், விவரம் புரியாத பாமரர்கள் எவ்வள்வு சிரம்த்திற்கு உள்ளாகிறார்கள்.
பசியுடன் மணிகணக்கில் வங்கி வாசலில் நின்று தவிக்கிறார்களே.
அவர்களை ஏமாற்றி இடைத்தரகர்கள் பணம் பறிக்கிறார்களே.
பார்க்கும் எனக்கு கண்ணில் கண்ணீர் வருகிறது. கோபம் வருகிறது.
ஆனால், டீ வியாபாரம் செய்த பிரதமரான மோடிக்கு தெரியலையே.
ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டுஅவருக்கு ஐடியா கொடுத்த சக்தி காந்த தாஸ் போன்றோர், பாமரனின் துயரத்தை அறிவார்களா?
அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கும் செல்வந்தர்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.
ஆனால், ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தானே உங்கள் நோக்கம்.
உங்கள் நோக்கம் நிறைவேறியது. பாமரனின் தூக்கம் போனது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot