Wednesday, February 15, 2017

சசிகலாவை திட்டி தீர்த்த பிரபலங்கள்

பத்ரி சேஷாத்ரி என்பவரை உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கும்.  தொலைக்காட்சி விவாதங்களில்
அரசியல் விமர்சகராய் பங்கேற்பார்.

26 ஆயிரம் பேர் அவரை பேஸ்புக்கில் பின் தொடருகிறார்கள்.
ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கு தண்டனை கிடைத்த பிறகு, மறுநாள் கோர்ட்டில் சரண் அடைவதற்கு
முன்னர் சசிகலா ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்தார்.
அதை பற்றி பத்ரி பேஸ்புக்கில் ஒரு பதிவை போடுகிறார்.
அது என்னவென்று பார்ப்போம்.

சசிகலா ஜெயலலிதாவின் கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்து சபதம் செய்த காட்சியைப்
பார்த்தேன். என்னவொரு வெறி. திருட்டுப் பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு! இத்தனை செய்து,
இத்தனை பட்டும் இந்தக் கூட்டத்துக்கு என்னவொரு ஆங்காரம்? இந்தக் கூட்டத்தை சேர்ந்த
யாரும் காலாகாலத்துக்கும் பொதுப் பதவி எதற்கும் வராத அளவுக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம்
மனிதர்களே அல்ல.

இவரின் இந்த பேச்சை நிறைய பேர் ரசிக்கவில்லை.
அவர்கள் கண்டனம் தெரிவித்த பின், பத்ரி பொறுக்கிகள் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்.

”அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனத்திற்கு பிறகு அதே பத்ரி இன்னொரு பதிவை பேஸ்புக்கி போடறார்.
சசிகலா பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டே அதிமுக ஆட்கள் கொதித்தெழுந்திருக்கவேண்டும்.
இப்படி ஜெயிலுக்குப் போய்க்கொண்டே ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் சசிகலா.
இதனைக் கண்டும் கொதித்து எழாத கோழைகள் இருக்கும் கட்சி நாசமாகப்போகட்டும்.
மக்களைக் கேனையர்களாக நினைக்கும் இந்தக் கூட்டத்துக்குப் பாடம் கற்பிக்கவேண்டும்.
அனைவரும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

1) சசிகலாவின் குடும்பத்தை திருட்டுப் பொறுக்கிகள் என்கிறார், ஆங்காரம் என்கிறார். இனிமேல் அந்த கூட்டத்தில்
  காலாகாலத்துக்கும் யாருமே பொது பதவிக்கு வர கூடாது என்கிறார்.

  ஆனால் அதே பத்ரி திமுகவை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
  திமுக ஒரு ஊழல் கட்சி என்பது அவருக்கு தெரியாதா?
  திமுகவிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது என்பதும் அவருக்கு தெரியாதா?

நடுநிலை அரசியல் விமர்சகர் என்ற பெயரில் இவரை போல பல ஆட்கள் நடுநிலையாக செயல்படாமல் இருக்கிறார்கள்..
கூர்ந்து கவனித்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.


நடிகர் கமல்ஹாசனை டிவிட்டரில் 6 லட்சம் பேர் பின் தொடருகிறார்கள்.
சசிகலா தண்டனை கிடைத்த பிறகு, கமல் ஒரு டிவிட் போட்டிருந்தார்.
இப்ப நீங்க ஸ்கிரின்ல் பார்க்கலாம்.
அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு தெளிவாய் தெரியவில்லை.
ஆனா, அதில் ஒரு கெட்ட வார்த்தை இருந்தது.
கொடுமை என்னவென்றால், அந்த கெட்ட வார்த்தை டிவிட்டரில் டிரண்ட் ஆனது.
அவர் டிவிட்டரில் சசிகலாவை தொடர்ந்து விமர்சித்து கொண்டு இருக்கிறார்.

கடந்த வாரம் பன்னீர்செல்வம், சசிகலா சண்டை நடந்த போது, ஒரு ஆங்கில சானலில் கமல்ஹாசன் பேசியிருந்தார்.
நாங்கள் அரசியலுக்கு வந்தால், சும்மா வர மாட்டோம்.
கையில் துப்பாக்கி கொண்டு வருவோம். அந்த அளவிற்கு கோபமாய் இருக்கிறோம் என்றார்.
நல்ல வேளை பிஜேபி காரங்க இவர் சொன்னதை கவனிக்கலை போல.
இல்லை என்றால் தேச துரோக வழக்கு போட்டுருப்பாங்க.

சசிகலாவிற்கு முதலமைச்சர் ஆகும் எந்த தகுதியும் இல்லை. என்னுடைய ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு
என்றார் கமல்.

1) சசிகலா ஒரு ஊழல்வாதி, அரசியல் அனுபவம் இல்லாதவர், அதனால் முதலமைச்சர் ஆகும் தகுதி இல்லை
என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் பன்னீர்செல்வத்திடம் என்ன தகுதியை கமல் கண்டார் என்று தெரியவில்லை?
17 வருடங்களாய் அமைச்சராய் கொள்ளையடித்தார். சசிகலா, ஜெயலலிதாவுடன் இணைந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டார்.
சசிகலாவிற்கு இணையாக சொத்துகளை சேர்த்து வைத்து இருக்கிறார்.
அதனால், கமல் எதனால் பன்னீரை ஆதரித்தார் அப்படின்ற கேள்வி எழுகிறது?

2) விஸ்வரூபம் படம் ரீலிஸ்க்கு முன், ஒரு விழாவில் ஒரு கருத்தை சொல்றார்., “தமிழில் பேசும் போது ஒரு ஆங்கில வார்த்தை கூட
கலக்காமல் அருமையாய் பேசும் பா.சிதம்பரம் இந்திய நாட்டின் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
வேட்டி கட்டிய தமிழன் பா.சிதம்பரம் தான் பிரதமராக வேண்டும் என்றார்”

இது ஜெயலலிதாவின் காதிற்கு போக, அவங்க டென்சன் ஆக, சசிகலாவை ஏவி விட்டு, விஸ்வரூபம்
படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். பின்னர் கமல் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு
கேட்ட பிறகு அந்த படம் ரீலீஸ் ஆனது.

ஜெயலலிதா இருக்கும் போது தன் எதிர்ப்பை கமல் காட்டவில்லை.
ஏனென்றால் ஜெயலலிதாவை எதிர்த்தால் என்னவாகும் என்பது கமலுக்கு தெரியும்.
ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவை தீட்டி தீர்த்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்.
ஜெயலலிதா சசிகலாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஊழல்வாதி பன்னீரை ஆதரிக்கிறார்.

கமலை போல் சில பிரபலங்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலமாகவே பொது
பிரச்சனைக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அது சில சமயங்களில் மக்கள் விரோதமான நிலைப்பாடாய்
இருக்கும்.

அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிரபலங்கள் சொல்லி விட்டார்கள் என்பதால் அதை நம்பனும் என்ற மனநிலையை
மாத்திக்கனு. எதையும் ஆராய்ந்து உண்மையை அறிய வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot