Monday, February 6, 2017

சசிகலா முதல்வர். ஸ்டாலினின் அதிரடி திட்டம் என்ன?

ஞாயிற்றுகிழமை பெரும்பாலான தமிழர்களுக்கு அதிர்ச்சிகரமான நாளாக இருந்தது.

சசிகலாவை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக
பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் அதற்கு ஆதரவு அளித்தார்கள்.

பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக
ஆளுனருக்கு கடிதம் அனுப்பி விட்டார்.

நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பன்னீர்செல்வம் தான் முதலில் வற்புறுத்தினார்
என்று சசிகலா சொன்னார்.

அடுத்தது என்ன?
சசிகலா முதலமைச்சராக பதவியேற்கும் விழா தான்.
7ம் தேதி அல்லது 9ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்பில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
என்னை பொறுத்தவரை நான் சொல்வது ஒன்று தான்.
“ஞாயிறு வரை ஒரு உத்தமரின் ஆட்சியா தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது?
இல்லையே.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம் மக்களை அடித்து கொடுமைப்படுத்தியது
பன்னீரின் அரசு தான?

பன்னீரோ, சசிகலாவோ இரண்டு பேருமே ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள் தான்.
எப்படி மக்களை ஏமாற்றி பொது சொத்தை திருட வேண்டும் என்று பயிற்சி பெற்றவர்கள்.
காவல்துறையை வைத்து எப்படி மக்களை பயமுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வச்சிக்கனும்னு பயிற்சி பெற்றவர்கள்.
அதனால் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்க போவது இல்லை”

காமராஜருக்கு பின்னர் இன்று வரை மக்களுக்காக ஆட்சி செய்த முதல்வரை தமிழகம் பெறவே இல்லையே.
அது கொடுமையிலும் பெரும் கொடுமை.

திமுகவிற்கு 89 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க.
ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும்.
வெறும் 19 எம.எல்.ஏக்கள் தான் திமுகவிற்கு தேவைப்படுகிறது.

சரி, இன்னும் ஏன் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கமா இருக்கார்னு ஒரு கேள்வி இருக்கு.
செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதிமுகவில் குழப்பம் ஆரம்பித்து விட்டது.
ஸ்டாலின் நினைத்து இருந்தால் திமுகவின் ஆட்சியை அமைத்தி இருக்க முடியும்.
ஆனால், ஏன் செய்யவில்லை?

ஞாயிறு தான் ஸ்டாலின் காத்திருந்த நாள் வந்தது.
இதற்கு முன்னர் திமுக ஆட்சி அமைத்திருந்தால், அது வெறும் குதிரை பேரமாகவே பார்க்கப்பட்டு இருக்கும்.
முதல் முறையாக முதலமைச்சராகும் ஸ்டாலினுக்கு அது நிச்சயம் நல்ல பெயரை தந்திருக்காது.

ஆனால் ஞாயிற்க்கு பின்னர் நிலைமை வேறு.
இன்னும் ஒரிரு தினங்களில் சசிகலா முதலமைச்சர் ஆக போகிறார்.
பெரும்பாலான மக்கள் சசிகலாவை முதலமைச்சராய் பார்க்க விரும்பவில்லை.
தமிழக வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சருக்கும் இந்த அளவிற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை.

திமுக ஆதரவாளர்களும், நடுநிலை என்ற போர்வையை போர்த்தியுள்ள திமுக ஆதரவாளர்களும்
ஸ்டாலின் தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கதறுகிறார்கள்.

ஸ்டாலினால் விலைக்கு வாங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்னும் ஒரிரு நாளில்
ஸ்டாலினை சந்தித்து  “சசிகலாவை முதல்வராய் எங்களால் ஏத்துக்க முடியலை. மக்களும் அதை விரும்பலை.
அதிமுகவிற்கு அடுத்தப்படியா பெரும்பாலான மக்கள் உங்களுக்கு தான் ஓட்டு போட்டுறுக்காங்க.
நீங்க தான் முதலைமச்சர் ஆகனும். நீங்க தான் தமிழ்நாட்டை காப்பாதனும்னு” சொல்வாங்க.

அப்புறம் திமுக ஆட்சி தான்.

இதை உறுதிப்படுத்தும் இரண்டு செய்திகளை பார்ப்போம்.
1) ஸ்டாலின் என்ன சொல்லிருக்கார்
“மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், அதேபோல அம்மையார் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம்
இன்றைக்கு அரங்கேறி இருக்கின்றது”

2) திமுகவின் சேப்பாக்கம் எம்.எல்.ஏ அன்பழகன் ”இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைவது உறுதி” என்று சொல்லியிருக்கார்.

இப்படியே திமுக, அதிமுகனு மாறி மாறி போய்க்கிட்டு இருந்தா தமிழகத்தை காப்பாத்தவே முடியாதா?
வர போகும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில், எவ்வளவு நோட்டு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க.
ஆனா நோட்டாவை குத்துங்க. அது தான் இவங்களுக்கு நாம கொடுக்கற அடி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம்ம மக்களை அடிச்ச அடியை நாம இன்னும் மறக்கலை.
நாம அவங்களை மாதிரி லத்தியில் அடிக்க மாட்டோம். நோட்டாவில் அடிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்.

கடைசியாக பன்னீரை பற்றி சொல்லிட்டு முடிச்சிக்கறேன்.
1) போயஸ் கார்டனில் இருக்கும் அனைவருக்கு அடிமையாக இருப்பேன்
என்று ஜெயலலிதாவிற்கு எழுதி கொடுத்ததை பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
இரண்டு மாதங்களாக சசிகலா பேச்சைக் கேட்காமல் பன்னீர் தன்னிச்சையாக செயல்பட்டார்
என்று சில ஊடகங்கள் எழுதியது வெறும் பொய் என்று நிருபணம் ஆகி விட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot