Wednesday, February 8, 2017

விஸ்வரூபம் எடுத்த பன்னீருக்கு சில கேள்விகள்

விஸ்வரூபம் எடுத்த பன்னீர்செல்வத்திற்கு சில கேள்விகள்.
இதை எல்லாம் பத்திரிக்கை நண்பர்கள் அவரிடம் கேட்க வேண்டும்.

1) கட்டாயப்பட்டுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னாங்கனு சொல்றீங்க.
மெரினாவில் போலீஸ் வன்முறையை உ கூட சசிகலா கட்டாயப்படுத்தி தான் நீங்க செஞ்சிங்களா?
ஒரு வேளை கட்டாயப்படுத்தி செய்ய சொல்லியிருந்தா, மக்களை காப்பாத்த
நேற்று பேசியது போல் அன்னிக்கே சசிகலாவின் சுயரூபத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியிருக்கலாமே?

2) மெரினாவில் போலீஸ் அராஜகத்தின் பின்னணியில் சசிகலாவின் தலையீடு இல்லைனா,
  பிஜேபி கட்டாயப்படுத்தி அப்படி செய்ய வச்சாங்களா?
  அப்படி இல்லைனா, போலீசை ஏவி விட்டது நீங்களா?

3) மெரினா போராடத்தின் போது, கடைசி நாள் காவல்துறை அராஜகத்திற்கு முன், நீங்கள் நேரில் வந்து
  நிரந்திர சட்டம் இன்று மாலை சட்டசபையில் நிறைவேறிவிடும் என்று சொல்லியிருந்தால், மாணவர்கள் கலைந்து
  போயிருப்பார்களே. யார் உங்களை தடுத்தது?

4) ஜெயலலிதா உங்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்கலையா?
  நீங்க முழு சுதந்திரமாய் செயல்பட முடிந்ததா?
  அப்படி செயல்பட முடிந்திருந்தால், ஏன் ஜெயலலிதா இருக்கும் வரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும்
  நீங்க கலந்துக்கலை?

5) சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா அறைந்தாரா இல்லையா?
  சசிகலா புஷ்பா விவகாரத்தில் சசிகலாவின் பங்கு என்ன?
  பிஜேபியின் இல கணேசனை ராஜ்ய சபா எம். பி ஆக்குவதற்கு தான் சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய சொன்னார்களா?

6) அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் ஒரு நாள் கூட அவரை சந்திக்கலைனு சொல்றீங்க.
  கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பதவியிலும் இல்லாத சசிகலா சந்திக்கும் போது
  முதலமைச்சரின் இலாக்காகளை கவனித்து வந்த உங்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை?
  நேற்றி பேசியது போல் அன்றைக்கு பேசி இருந்தால், ஒரு வேளை ஜெயலலிதாவின் உயிரையே காப்பாற்றி இருக்கலாமே?
  உங்க பதவிக்கு பிரச்சனை வந்தா மட்டும் தான் பேசுவீங்களா?

7) சசிகலா செய்த ஊழல்களை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா?

8) அதிமுக விசுவாசியான நீங்கள், திமுக ஆதரவால் முதலமைச்சராய் தொடர்வீர்களா?
  அல்லது உங்கள் அணி திமுகவிற்கு ஆதரவளித்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குமா?

9) நீங்க முதலமைச்சராய் இருக்கும் போது, அமைச்சர்கள் சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும்
  என்று சொன்னது உங்களுக்கு அவமானமாக இருந்தது என்று சொன்னீங்க.
  சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்து நீங்க முதலமைச்சர் இருந்த போது, ஜெயலலிதா
  முதல்வர் ஆக வேண்டும் என்று உங்களின் அமைச்சர்கள் யாகம் வளர்த்துவதும், மண் சோறு சாப்பிடுவதும்
  நடந்தததே. அப்போது உங்களுக்கு அவமானமாக இலலையா?

பன்னீரும் ஊழல்வாதி தான்.
சசிகலாவா, பன்னீரா என்று கேட்டால் பன்னீர் என்று தான் சொல்வேன்.
ஆனால், இத்தனை நாள் அதிமுக தலைமைக்கு அடிமையாய் இருந்த பன்னீர், இப்போது தன் சொந்த காலில்
தான் நிற்கிறாரா அல்லது பின்னாடி இருப்பது திமுக அல்லது பிஜேபியா என்பது சில நாட்களில் தெரியும்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot