Thursday, February 2, 2017

கள்ளக்காதலை மதக்கலவரம் ஆக்கும் பாஜக

கள்ளக்காதலில் பாஜக செய்த அரசியல் அம்பலம்.
கள்ளக்காதலை மதக்கலவரம் ஆக்கும் பாஜக
பாஜகவின் மதக்கலவர திட்டம் அம்பலம்


ஹிந்து முஸ்லிம் மக்கள் இடையே ஒரு பதற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பாலான
ஹிந்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியை பிடிப்பதையே பாரதீய ஜனதா கட்சியோட கொள்கை.

சமீபத்தில் தமிழ்நாட்டில் அப்படி ஒரு முயற்சியை செய்த பாஜகவினர் எப்படி அசிங்கப்பட்டு போனார்கள்
என்பதை பற்றி பார்ப்போம்.

மாரிமுத்து என்பவர் பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இவரின் உடல் தூக்கில் பிணமாக தொங்கிட்டு இருந்திருக்கு.
காவல்துறையினர் வந்து ஆய்வு செய்றாங்க. பிணத்தின் பக்கத்தில் ஒரு அட்டையிலை 1,2,3,4,5 என எண்கள் எழுதப்பட்டு இருந்தது.
அதில் எண் 3 அடிக்கப்பட்டு இருந்தது.
இதெல்லாம் நம்பியார் படத்திலேயே பாத்திருப்போமே. 5 பேர்லை ஒருத்தரை முடிச்சுட்டாங்களாம்.
இன்னும் 4 பாக்கி இருக்குனு சொல்றாங்கலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னன்னா, மோடியின் படம் ஒன்று அங்கு இருக்கிறது. அதற்கு செருப்பு மாலையும் போடப்பட்டு இருக்கிறது.
தேசிய கோடி தலைகீழாக வைக்கப்பட்டு இருந்தது.

இது போதுமே. முஸ்லீம் தான் கொலை செஞ்சிருப்பான். ஹிந்து மக்களுக்கு நாட்டில் பாதுகாப்பே இல்லை அப்படின்னு
சொல்லி ஒரு மதக்கலவரத்தை உருவாக்கற எல்லா அம்சமும் இந்த சம்பவத்தில்
இருக்கிறதே என்று பிஜேபி, ஹிந்து முண்ணனி மற்றும் தோழமை இயக்கங்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் பிஜேபியை குறி வைத்து தாக்குகிறது. தமிழக அரசு உடனடியாக கொலையாளிகளை
கண்டுப்பிடிக்க வேண்டும் என்று பிஜேபியின் முரளிதர ராவ், வானதி சீனிவாசன் ஆகியோர்
பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே, பிஜேபியை பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்.
போன வருசம் எடுக்கப்பட்ட பின்லேடன் போட்டோவை, மெரினா போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோ என்று
பிஜேபியின் எச்.ராஜா கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யை அள்ளி விட்டார். பின்னர் அது பொய் என்பதை அனைவரும்
தெரிந்து கொண்டார்கள். இவர்களோட லட்சணத்தை தெளிவாய் தெரிந்து கொண்ட மக்கள்,
பதற்றத்தை உருவாக்க நினைத்த பிஜேபி காரங்களுக்கு ஆதரவு கொடுக்காம, அமைதியா இருந்துட்டாங்க.

இந்த நிலையில், முதல் கட்ட விசாரனைக்கு பிறகு போலீசார் கொலைக்கான காரணத்தை வெளியிட்டார்கள்.
கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லைனு சொன்னாங்க.
மாரிமுத்துவிற்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது என்றும்
இது குடும்பத்தாருக்கு தெரிந்து விட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்னு
கண்டு பிடிச்சிருக்காங்க.

கள்ளக்காதல் தற்கொலையை கொலையாக மாற்றி மத வெறியை தூண்டி விட்டு ஆதாயம் அடைய பார்த்திருக்கிறார்கள்
என்பது வெட்ட வெளிச்சம் ஆனது.

மோடிக்கு எதிரா நாங்க கோஷம் போட்டா, தேச துரோகிகள்னு சொல்றாங்க.
அவங்க கட்சிக் காரங்களே, மோடிக்கு செருப்பு மாலை போட்டுறாங்களே.
என்னன்னு சொல்றது இந்த கூத்தை?

எதிர்ப்பார்த்த கலவரம் நடக்கலை. நேர்லை போய் ஒரு attendance போட்டலாவது
திருப்பூரில் ஒரு பதற்றம் உருவாக்காதா என்று நப்பாசையில் மத்திய அமைச்சர்
பொன் ராதாகிருஷ்ணன், “வீர மரணம் அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க வருகிறேன்” என்று அறிவிக்கிறார்.
அதுக்குள்ள தான், இது கொலையே இல்லை என்ற தகவல் வெளியாயுடுச்சே.
அமைச்சர் டிரிப் cancel பண்ணிட்டாரு.

மக்களுக்கு நல்லது செஞ்சி, கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிக்கனும்னு நினைச்சா அது ஒரு நேர்மையான கட்சினு சொல்ல்லாம்.
பாரதீய ஜனதா கட்சியிடம் அதை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. மதத்தால் மக்களை பிரித்து ஆட்சியை
பிடிப்பது தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே கொள்கை என்பது இந்த சம்பவத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் தெள்ள தெளிவாய் தெரிஞ்சு போச்சு.

செய்த தவறை உணர்ந்தவர்கள் தற்கொலை செய்வது தான் தீர்வு என்று முடிவு செய்வது ஒரு தவறான முடிவு.
இனி எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து திருந்தி வாழ்ந்திருக்கலாம்.
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot