Sunday, February 12, 2017

பன்னீரை ஆதரித்தால் என்ன ஆபத்து?

7 செப்டம்பர் 1995 - ஜெயலலிதா வளர்ப்பு மகனின் திருமணம் நடக்கிறது.
200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்றாங்க. இன்றைய மதிப்பு கிட்டத்த்ட்ட 1000 கோடி ரூபாய்.
திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், மார்கெட்டுக்கு போனா, காய்கறியே இருக்காது.
என்னனு கேட்டா, எல்லா காய்கறியும் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்துக்கு போய்டுச்சினு சொல்வாங்க.
மீன் மார்கெட் மற்றும் கறி கடைகளிலும் அது தான் நிலைமை. அந்த திருமணத்தினால்
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். மக்கள் ஜெயலலிதா மீது கடும் கோபம் அடைந்தார்கள்.

7 மாதங்களுக்கு பிறகு  மே 1996 இல் தேர்தல் நடக்கிறது:
சன் டிவி அப்போது மிகவும் பிரபலமான டிவி.
தேர்தல் கால கட்டத்தில் அந்த ஆடம்பர திருமணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும்
வீடியோக்களை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பினார்கள்.

ரஜினி சன் டிவியில் தோன்றி, “இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, ரஜினியின் பேச்சு மக்களை இன்னும் கோபப்படுத்தியது.
மக்கள் ஜெயலலிதா மீது கொலைவெறியில் இருந்தார்கள்.

தேர்தல் நடந்தது. அதிமுக மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக வெறும் 4 தொகுதிகளில் தான் வென்றது.
ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதா மீது மக்கள் கடும் கோபமாய் இருந்தததால், மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து கருணானிதியை முதல்வர் அக்கினார்கள்.

மே 10 2011 இல் அடுத்த தேர்தல் நடக்கிறது.
திமுகவின் ஆட்சி மீது கடும் கோபத்தில் இருந்த மக்கள், அதிமுகவிற்கு வாக்களித்தார்கள்.
அதிமுக கூட்டணி 196 தொகுதிளில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகிறார்.

இதில் கவனிக்க வேண்டியவை என்ன என்று பார்ப்போம்.
1) 1996 இல் ஜெயலலிதா மீது கோபப்பட்டு, கருணாநிதிக்கு வாக்களித்தார்கள்.
  2001 இல் கருணாநிதி மீது கோபப்பட்டு , ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள்.

2)1996 இல் கடும் தோல்வி அடைந்த அதிமுக இன்னமும் தமிழகத்தில் பலமான கட்சியாக தான் இருக்கிறது.
2001 இல் கடும் தோல்வி அடைந்த திமுகவும் இன்னமும் பலமான கட்சியாக் தான் இருக்கிறது.

3)1996 இல் கெட்ட வார்த்தைகள் ஒன்றை விடாமல் திட்டி தீர்த்த ஜெயலலிதாவை அதே வாய்கள் பின்னர்
 அம்மா என்று புகழ்ந்து பாடினார்கள்.

இதை சொல்வதற்கு காரணம் என்னவென்றால்,
“சசிகலா முதல்வர் ஆவதை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனால் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறோம்.
முதலில் சசிகலாவை துரத்துவோம். பின்னர் பன்னீர்செல்வத்தை துரத்தி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று சொல்றாங்க”

அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
என் முந்தைய வீடியோக்களில் பல தடவை ஒரு கருத்தை சொல்லியிருக்கிறேன்.
பன்னீர்செல்வம், சசிகலா - இருவருமே சரி சமமான ஊழல்வாதிகள் தான்.
ஒரு தீய சக்தியை அழிக்க இன்னொரு தீய சக்தியை பயன்படுத்துவதை விட மிகப்பெரிய தவறு எதுவும் இருக்க முடியாது.
மக்கள் அனைத்தையும் சீக்கிரமா மறந்துடுவாங்க.
மேற் சொன்ன ஒரு உதாரணத்தில் இது உறுதியாகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழக தேர்தல் முடிவுகளை அலசினால், இன்னும் பல உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும்.
அதனால், இப்ப இதை பண்றேன். அப்புறம் இதை மாத்திக்கிறேன் என்றூ சொல்வது எடுபடாது.

சன் பிக்சர்ஸ் தமிழ் சினிமா உலகத்தை சீரழிக்கிறது. அதற்கு ஒரு முடிவு கட்டுவேன் என்று 2011 தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா முழங்கினார்கள்.
சொன்ன மாதிரி சன் பிக்சர்ஸின் ஆதிகத்தை ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆனால், ஜாஸ் சினிமாஸ் முளைத்தது. சன் பிக்சர்ஸ் செய்த அதே வேலையை தான் செய்கிறது.
தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை வாங்குவது, திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு திரையரங்குகளை விலைக்கு வாங்குவது
என்று எல்லா வித அராஜகங்களையும் செய்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கபாலி பட டிக்கெட்டுகளை கவுண்டர்லியே 5000 ரூபாய் வரைக்கும்
விற்றதும் இவர்கள் தான்.
பன்னீர்செல்வம் முதல்வர் ஆனா, பன்னீர் சினிமாஸ் நு ஒர் நிறுவனம் வரும்.
அவ்வளவு தான் இங்கு நடக்க போகும் மாற்றம்.

மதுரையில் நிறுவனங்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பல
கட்டப்பஞ்சாயத்துகளில் அழகிரி ஈடுபட்டு இருந்தார்.
அழகிரியின் ஆராஜகத்தை ஒழிப்பேன் அப்படின்னு 2011 தேர்தலில் ஜெயலலிதா சொன்னாங்க.
சொன்ன மாதிரி அழகிரியின் ஆராஜகம் ஒழிந்தது. ஆனா இப்ப அதே கட்டப்பஞ்சாயத்தை அதிமுக தாதாக்கள் செய்கிறார்கள்.
பன்னீர்செல்வம் முதல்வர் ஆனா, அவரின் ஆதரவு தாதா கட்டப்பஞ்சாயத்து செய்வார்.
அவ்வளவு தான் இங்கு நடக்க போகும் மாற்றம்.

திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என்று சொன்ன ஜெயலலிதா,
சசிகலாவின் குடும்பத்தின் மூலம் தானும் குடும்ப ஆட்சியை தான் நடத்தினார்.
பன்னீர்செல்வம் முதல்வர் ஆனா, பன்னீரும் குடும்ப ஆட்சி தான் செய்வார்.
அவரின் மகன் ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ. மகனுக்கு அமைச்சர் பதவி கேட்க ஜெவும், சசியும் அதற்கு மறுத்து விட்டார்கள்.
இவரிடம் அதிகாரம் வந்தால், இன்னும் நிறைய குடும்பத்தினர் நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பார்கள்.
அவ்வளவு தான் இங்கு நடக்க போகும் மாற்றம்.

இரண்டு திருட்டு கும்பல் பதவி வெறியில் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.
பன்னீருக்கு பின்னால் இருந்து சண்டைக்கு உதவுவது டில்லியின் திருட்டு கும்பல்.
திருடனுங்க சண்டையில் தேவையில்லாம உள்ளே போய், ஒரு திருடனை ஹீரோ ஆக்குவது மிக பெரிய தப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்த சபதத்தை ஏன் மறந்தோம்?
எந்த அரசியல்வாதியையும் நம்ப மாட்டோம், நாங்களே களத்தில் குதிப்போம்னு சொன்னோம்.
ஆனா, அதை மறந்துட்டு பன்னீர்செல்வத்தை ஹீரோவாக்குகிறோம்.

பன்னீரும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், தேர்தல் தான் வேண்டும் என்பது தானே நம் கோஷமாக இருக்க வேண்டும்.
ஏன் அதை மறந்தோம்.
நம் இளைஞர்கள் கட்சி தொடங்கி விட்டார்கள்.உறுப்பினராக சேருங்கள் என்று அழைக்கிறார்கள்.
அதை சுத்தமா கண்டு கொள்ளாமல் பன்னீரை முதல்வர் ஆக்கியே தீருவோம் என்று கோஷமிடுவது
எவ்வளவு பெரிய மூட்டாள்தனம். நம் கவனம் சிதறிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி தமிழ்நாட்டை சீரழித்தது போதும்.
பன்னீர், சசிகலா, ஸ்டாலின் - யாருமே வேண்டாம்.
50 ஆண்டுகளாய் ஏமாந்தது போதாதா? பன்னீர் என்ற திடீர் ஹீரோவின் மூலம் இன்னும் பல ஆண்டுகள்
ஏமாறனுமா என்றும் யோசிக்கனும்.

மெரினா போராட்டத்தின் இறுதியில் இளைஞர்களை அடித்து துரத்தி அரசியல் செய்தார்கள் நம் அரசியல்வாதிகள்.
இப்போது இரண்டு திருட்டு கும்பலின் சண்டையில் ஒரு கும்பலுக்கு நம்மை ஆதரவு தெரிவிக்க வைத்து
அரசியல் செய்கிறார்கள்.
அவர்கள் நம்மை வைத்து அரசியல் செய்தது போதும். அதை நிறுத்த வேண்டும்.
நம்மோட அரசியலை நாம் தீர்மானிக்க வேண்டும்.
”அந்த கட்சி வேண்டாம், அதனால் இந்த கட்சிக்கு ஓட்டு போட போறேன்.
சசிகலா வேண்டாம். அதனால் பன்னீருக்கு ஓட்டு போட போறேன்”
இந்த மனநிலையை மாற்றுவோம்.
இளைஞர்கள் மற்றும் நேர்மையானவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதை மனதில் நிலை நிறுத்துவோம்.

எல்லாரும் சசிகலாவை தீட்றாங்க. பன்னீரை ஆதரிக்கிறாங்க.
அதனால் நானும் அப்படியே பண்ணிட்டு போறேன் என்ற தவறை இழைக்க போறீங்களா.
இல்லைனா, இருக்கும் உண்மையை ஆராய போறீங்களா?

நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
இளைஞர்களின் கட்சியை பலப்படுத்துவோம் என்று களத்தில் இறங்க போறாமா?

யோசிப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot