Wednesday, February 15, 2017

பன்னீரின் கல் நெஞ்சம் அம்பலம்

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஜெயலலிதா. சசிகலா உட்பட மீதி மூன்று பேர்களும் உடந்தைகள்.

ஏற்கனவே கர்நாடகா நீதிமன்றத்தில் மைகெல் குன்கா கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார்கள்.
ஜெயலலிதாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம்.
சசிகலா, இளவரசி, சுதாகாரனுக்கு 4 வருட சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

நீதிபதி சொல்லும் முக்கியமான கருத்து.
சசிகலா, இளவரசி, சுதாகரனை மனிதாபிமான அடிப்படையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா தங்க வைக்கவில்லை.
அவர்கள் தங்க வைக்கப்பட்டதே ஜெயலலிதாவின் ஊழலை மறைப்பதற்கு மட்டும் தான்.
ஊழல் புற்று நோய் போல் ஆகி விட்டது. நாம் இணைந்து போராடி ஊழலை அழிக்கனும்.

ஜெயலலிதா மேல் கிட்டத்தட்ட 10 வழக்குகள் போடப்பட்டிருந்தது.
அனைத்திலும் இருந்து விடுபட்டார்.
ஆனால், இந்த ஒரு வழக்கில், அதுவும் இறந்த பிறகு தண்டனை கிடைத்திருப்பது ஜெயலலிதாவின் ஆத்மாவிற்கு
சங்கடத்தை கொடுத்திருக்கும்.

மக்களின் பார்வையில் நீதி வென்றது என்ற கருத்தை பரவலாக பார்க்க முடிகிறது.
இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு பெரிய அடி. ஏனென்றால், கட்சியின் ஆணி வேராக பார்க்கப்படும்
ஜெயலலிதாவை குற்றவாளி என்று தீர்ப்பு சொல்கிறது.

கடந்த முறை இதே வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கு இதே தண்டனை கிடைத்த போது,
அதிமுகவினர் கொந்தளித்தார்கள். திமுக பொய் வழக்கு போட்டு அப்பாவி ஜெயலலிதாவை தண்டித்து விட்டார்கள். என்றார்கள்.
நீதிபதி மைகல் குன்கா, கருணாநிதி, சுப்ரமணியசுவாமி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தார்கள்.
கண்ணீர் விட்டார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், கோவில்களில் பூஜை செய்தார்கள்.

அதே தீர்ப்பு தான் இப்போதும் வந்திருக்கிறது.
ஆனால் மேல் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
பன்னீர் கோஷ்டி பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
சசிகலாவிற்கு தண்டனை கிடைத்து விட்டது என்று உற்சாகம் அடைந்தார்கள்.
ஆனால் தீர்ப்பு ஜெயலலிதாவை குற்றவாளி என்று சொல்கிறது என்பதை பற்றி
அவர்கள் துளியும் கவலைப்பட்டதாய் தெரியவில்லை.

உலகத்திலேயே தங்கள் கட்சி தலைவருக்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய ஒரே கோஷ்டி அதிமுக கோஷ்டி தான்.
இது நிச்சயமா ஒரு வரலாற்று சாதனை.

”அம்மாவின் ஆத்மா உயிருடன் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு காட்டியிருக்கிறது. அம்மாவின் நல்லாட்சி தொடரும் - பன்னீர்”
இரண்டு கேள்விகள்
ஜெயலலிதாவின் ஆத்மாவே தனக்கு தண்டனை கொடுத்திருக்கிறது என்று பன்னீர் சொல்கிறாரா?
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பில் தண்டனை பெற்றவர். எனவே ஊழல் ஆட்சி தொடரும் என்கிறாரா?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று பன்னீர் கோஷ்டியில் சேர்ந்துட்டாங்க.
அவர் தீர்ப்பை வரவேற்பதாக சொல்கிறார்.

இருவருமே பதவி வெறியர்கள்.
சசிகலா முதல்வர் பதவியை பறித்த்தால் பிஜேபி உதவியுடன் பன்னீர்செல்வம் கட்சியை உடைத்தார்.
தீபா கேட்ட பதவியை கொடுக்க முடியாது என்று சசிகலா சொல்லி விட்டதால், தனி கட்சி தொடங்க போவதாக
கூறி வந்தார். 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று முடிவை அறிவிக்க போகிறேன் என்று சொன்னார்.
ஆனால் 10 நாள் முன்னாடியே பன்னீரின் கோஷ்டியில் இணைந்து விட்டார்.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதா சிலை வைக்க போகிறோம் என்றும் சொன்னார்கள்.
ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என்பதால் இந்த இரண்டையுமே செய்ய முடியாது

”ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.” என்று மனு போடப்படும்
என்று எந்த தகவலையும் பன்னீர் இதுவரை சொல்லவில்லை.

ஒரு சில தினங்களுக்கு பிறகு அம்மாவின் ஆத்மா சொன்ன பிறகு இதை செய்ய வாய்ப்பூண்டு.

ஜெயலலிதா, சசிகலா இருவருமே கூட்டு கொள்ளையர்கள்.
ஒருவரை புனிதராக்கி, இன்னொருவருக்கு திருடன் பட்டம் கட்டுவது தர்மம் ஆகாது.
“அம்மாவின் நல்லாட்சி அமைப்போம்” என்று பன்னீர் கோஷ்டி சொன்னாலோ, சசிகலா கோஷ்டி சொன்னாலோ
ஒன்றை மட்டு மனதில் வைத்து கொள்ளுங்கள், “இவர்கள் ஊழல் ஆட்சியை அமைப்போம் என்று தான் சொல்கிறார்கள்”
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வர போகும் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். அவர்கள் கட்சிக்கு ஓட்டு போடுவோம்.

சசிகலாவிற்கு தண்டனை கிடைத்ததால் அவர் முதலமைச்சர் ஆக முடியாது. பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்கவும் முடியாது.
இந்த செய்தியை நீங்கள் பல தடவை பார்த்து இருப்பீர்கள்.

ஆனால், ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதை பல ஊடகங்கள் சொல்ல மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot