Saturday, February 18, 2017

சோனியா காந்திக்கும் சசிகலாவிற்கும் என்ன ஒற்றுமை?

பிஜேபியின் அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 2004 வரை பிரதமராக இருந்தார்.
2004 தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்று இந்தியா முழுக்க பிரமாண்டமாய் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தார்கள்.
அவர்கள் பிரச்சாரத்திலும் “இந்தியா ஒளிர்கிறது” என்ற வாசகத்தை முன்னிறுத்தினார்கள்.
சோனியா காந்தியோ பிஜேபிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் “இந்தியா யாருக்காக ஒளிர்கிறது?” என்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அரசு அறுதி பெரும்பான்மையை பெறுகிறார்கள்.
16 மே அன்று கூட்டணி கட்சிகளின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்க பட்டார்.
சோனியா காந்தி தான் பிரதமர் ஆக போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
சோனியா ஒரு இத்தாலிய நாட்டு பெண்மனி, அவர் இந்தியர் அல்ல, அவர் பிரதமரானால் மொட்டை அடித்துக் கொண்டு, ரோட்டில் படுத்து போராட்டம் நடத்துவேன் என்று
பிஜேபியின் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாய் கூறுகிறார். பிஜேபியின் மற்ற தலைவர்களும் சோனியா காந்தி பிரதமர் ஆக கூடாது என்று கடும் கண்டனங்களை
தெரிவித்தார்கள்.

அப்போது ஜனாதிபதியாய் இருந்த அப்துல் கலாம் சோனியாவிடம் தன் கவலையை சொல்லியிருக்கிறார்.
வெளிநாட்டு பெண் பிரதமரானால், தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம்.
வன்முறைகள் வெடிக்கலாம். நீங்கள் பிரதமர் பதவியை வேறு ஒருவருக்கு விட்டு கொடுக்கனும் என்றார்.

பிரதமர் ஆக போகிறோம் என்று முடிவாகி, பின்னர் அதை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவிற்கு ஏற்பட்டது.

சசிகலாவிற்கு என்ன நடந்தது:
---------------------
5 பிப்ரவரி 2016இல் சசிகலா அதிமுகவின் சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க படுகிறார்.
முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும் என்று ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார்.
மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.
அடுத்த நாளே சுப்ரீம் கோர்ட் ஒரு தகவலை வெளியிடுகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
14 பிப்ரவரி அன்று தீர்ப்பு வருகிறது. ஜெ, சசி உட்பட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவிக்கிறது.
அன்றே, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலிக்கு சசிகலா பரிந்துரை செய்தார்.
சட்டசபை கட்சி தலைவராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சசிகலா சிறை செல்கிறார். முதல்வர் கனவு உடைந்து போனது.

இந்த இரண்டு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஓரே மாதிரியாக இருந்ததால் இதை பகிர்ந்துக்கலாம் என்று நினைத்தேன்.
பதவிக்கு எல்லாமே தயாராக இருக்கும் போது

அன்று சோனியாவை காந்தியை பிரதமராக விடாமல் கடும் போராட்டம் செய்து தடுத்ததும் பிஜேபி தான்
இன்று சசிகலாவை முதலமைச்சர் ஆக விடாமல் போராட்டம் செய்து தடுத்ததும் பிஜேபி தான். அதாவது பிஜேபியின்
சேவகர் பன்னீர்செல்வம்.

2009 காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகும், மன்மோகனையே மீண்டும் பிரதமராய் அமர்த்தினார்.
கடந்த பல மாதங்களாய் சோனியா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
ராகுல் தான் கட்சியை நடத்துகிறார்.

அது போல் சசிகலாவின் முதலமைச்சர் கனவும், அரசியல் பிரவேசமும் முடிந்து போகுமா?
ஜெ சமாதியில் சபதம் செய்து விட்டு போய் இருக்கிறாரே.
என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot