Thursday, February 23, 2017

ஹட்ரோகார்பன் திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?

கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
ஆனால் மீத்தேன் திட்டத்தை வேறு ஒரு பெயரில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மீத்தேன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் ஹட்ட்ரோ கார்பன் வாயு என்ற பெயரில் மீண்டும் வந்திருக்கிறார்கள்.
இந்த திட்டத்திற்கு 2009 இல் அனுமதி கொடுத்தது எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின்.

கடந்த ஒரு ஆண்டில் ஹட்ரோகார்பன் எரிவாயு எடுக்க தமிழகத்தில் 207 கிணற்றுகளை வெட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.
பொதுமக்களின் கருத்தை கேட்டு தான் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தங்களாம்
கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை,ராமனாதபுரம், காவிரிப்படுகை, திருவாரூரில் கிணறுகள் தோண்ட அனுமதி கொடுத்திருக்காங்க.

2009 இல் ஸ்டாலின் கையேழுத்து போட்டவுடன் மாநிலத்தின் பங்கு முடிந்து விட்டதா அல்லது
அதற்கு பின்னர் மாநில அரசாங்கத்தில் ஏதேனும் அனுமதி பெறப்பட்டதா என்பது கூறித்து எந்த தகவலும் இல்லை.

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த ஹ்ட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஓப்புதல் அளித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தின் நல்லது கெட்டதை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஹட்ரோகார்பன் வாயுவில் methane, ethane, propane, butane ஆகிய வாயுக்கள் உள்ளடக்கம்.

அதில் மீத்தேனுக்கு தான் பயன்பாடு அதிகம்.
அதனால் இனி பேசுகையில் ஹட்ரோகார்பன் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் மீத்தேன் என்று சொல்ல போகிறேன்.

மீதேனின் பயன்கள் என்ன?
மீதேன் வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.
மீதேன் மூலம் உருவாக்கப்படும் வாயுவை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்து 2030 க்குள் இறக்குமதியை முழுமையாக நிறுத்துவது தான்
மத்திய அரசின் நோக்கம் என்று சொல்றாங்க. அதற்காக தான் இந்தியா முழுக்க கிணறு தோண்ட அனுமதி தந்து கொண்டிருக்கிறார்கள்.

Fracking என்றால் என்ன?
ஆள் கிணறுகளை தோன்றி மீத்தேன் எடுக்கும் இந்த முறைக்கு பெயர்  hydraulic fracturing
or fracking. கடந்த 15 வருடங்களில் இந்த fracking முறையை பயன்படுத்தி நிறைய நாடுகள் மீத்தேனை எடுத்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 லட்சம் கிணறுகள் இருக்கிறது.

10,000 அடி வரை பூமியில் துளையிட்டு ஆழ் கிணறுகள் உருவாக்கப்படும்.
தண்ணீர், மணல் மற்றும் ரசாயனங்களின் கலவையை பூமிக்கு அடியில் செலுத்தி பாறையை வெடிக்க செய்து, மீத்தேன் வாயுவை வெளியேற செய்வார்கள்.

கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்:
பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாக துளை போடுவார்கள். பின்னர் பக்கவாட்டில் பாறையில் துளை போடுவார்கள்.
பம்புகள் மூலம் மணல், தண்ணீர் மற்றும் ரசானாயங்களின் கலவையை உள்ளே அனுப்புவார்கள்.
80 லட்சம் லிட்டர் தண்ணீர், பல ஆயிரம் டன் மணல் மற்றும் 2 லட்சம் லிட்டர் ரசானாய பொருட்கள் மூலம் அந்த கலவையை தயார் செய்வார்கள்.

அந்த அளவு தண்ணீரின் மூலம் 65000 மக்களின் ஒரு நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.
அந்த அளவு மணலை கொண்டு பல ஆயிரம் வீடுகளை கட்டலாம்.
ஒரு தடவை பயன்பாட்டிற்கே இவ்வளவு தண்ணீர், மணல் தேவைப்படுதே, பல ஆண்டுகள் இந்த திட்டம் செயல்படுத்த பட்டால்,
சுற்று வட்டாரத்தில் நல்ல தண்ணீர் மற்றும் மணலே இல்லாத நிலை உருவாக்கும்
ஒவ்வொரு முறை 2 லட்சம் லிட்டர் ரசாயானம் நம் பூமிக்குள் செல்லும் போது, அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உள்ளே அனுப்பப்படும் கலவை பாறைகளில் இடுக்குகளில் ஊடுருவி விரிசல்களை உருவாக்கும். ஏற்பட்ட விரிசல்களை மறுபடியும் மூடாமல் தடுப்பது மணல்.
விரிசல் பெரிதாகி பாறை வெடிக்கும்.
பாறைகள் வெடித்தவுடன் அங்கு மீத்தேன் வாயு வெளிப்படும்.
பம்புகள் மூலம் உள் அனுப்பிய ரசானாயங்களுடன் சேர்த்து மீத்தேன் வாயுவையும் வெளியில் இழுப்பாங்க.
பின்னர் அதில் இருந்து மீத்தேன் வாயுவை பிரித்து எடுப்பார்கள்.

ஒவ்வொரு கிணற்றில் இருந்தும் ஐந்து நாளைக்கு ஒரு முறை மீத்தேனை எடுப்பார்கள்.

என்ன ஆபத்துகள்:
1) மீத்தேன் கலந்த ரசானாயங்கள் நிலத்தடி நீருடன் கலக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
  அப்படி கலக்கும் போது, குடி தண்ணீர் மாசாகி விடும்.
  சுத்திக்கரிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் மாசு அடைந்து விடும்.

  இதை குடிச்சா எந்த மாதிரி விளைவுகள் ஏற்படும் என்பதை கண்டுபிடிக்கவில்லை.
  இதை பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.
  ஆனால் ஆபத்து நிச்சயம் என்று தான் அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் சொல்கிறார்கள். தோல் நோய், புற்று நோய், சுவாச கோளாறுகள், சிறுநீரக செயல் இழப்பு,
  கருசிதைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

2) மீத்தேன் கலந்த நீர் எரியும் தன்மை கொண்டது.
  நெருப்பை அணைக்கு தண்ணீரை ஊற்றுவோம். ஆனால் தண்ணீரே எரியும் நிலை உருவாகும்.

3) அமெரிக்காவில் இதில் வெளிப்படும் கழிவுகளை இதற்கென உருவாக்கப்பட்ட கிணறுகளில் கொட்டுகிறார்கள்.
  சில இடங்களில் இதை மறுசுழற்சி செய்து மீண்டும் கலவையாக பயன்படுத்துகிறார்கள்.
  ஆனால் நம் நாட்டில் இந்த கழிவுகளை எங்கே கொட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை?
  சரியான முறையில் வெளியேற்றவில்லை என்றால் சுற்றியிருக்கும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு உண்டாகும்.

4) இதற்கு பயன்படுத்தப்படும் ரசாயான பொருட்களில் benzol மற்றும் formic acid உம் அடங்கும்.
  அது மிகவும் ஆபத்தானது என்று சொல்கிறார்கள்.

5) விவசாய நிலங்கள் இருக்கும் இடத்தில் இவ்வளவு தண்ணீரை எங்கிருந்து எடுக்க போகிறார்கள்.
  போர் போட்டு தண்ணீர் எடுத்தாங்கணா, விவசாயி என்ன பண்ணுவான்?
  ஏற்கனவேதண்ணி இல்லாம கஷ்ட படும் விவசாயிக்கு, இது ஒரு பெரிய இடியாக அமைந்து விடும்.

6) ஏற்கனவே ஆற்றுகளில் முறைகேடாக மணல் அள்ளிக்க் கொண்டு இருக்கிறார்கள்.
  இந்த திட்டத்திற்கும் நிறைய மணல் தேவைப்படுகிறது.
  மொத்தத்தில் மணல், தண்ணீர் இரண்டையும் இவர்கள் சுரண்டுவார்கள்.
  தமிழகத்தை அழிவு பாதையில் கொண்டு செல்லும்.

7)


இதனால் ஏற்படும் பயன்களை விட ஆபத்து தான் அதிகம்.
பல ஆண்டுகள் இந்த நச்சுத்தன்மை கொண்ட ரசானாயங்கள் நம் பூமியில் தொடர்ந்து செலுத்தப்படும் போது
நிலத்தடி நீர் முழுவதும் நஞ்சு ஆகி விடும். விவசாய நிலம் விளையாத நிலமாகி விடும்.

அதனால் தான் பல ஐரோப்பிய நாடுகள் இந்த fracking முறையை தடை செய்துள்ளார்கள்.

குப்பைகளிலில் இருந்தும் மீத்தேன் வாயுவை எடுக்கலாம்.
இந்த அளவிற்கு அதில் ஆபத்து இல்லை. இந்த அளவிற்கு தண்ணீரும், மணலும் வீணாக போவதும் இல்லை.
நம் நாட்டில் குப்பைக்கா பஞ்சம்.
குப்பைகளை பயன்படுத்த்தினால், நாடு சுத்தம் ஆகுமே.

நெடுவாசலில் போராட்டம் நடக்கிறது.
சென்னை மற்றும் பிற பகுதிகளிலும் மக்கள் தங்களால் இயன்ற வகையில் தங்களின் எதிர்ப்புகளை காட்டிக் கொண்டு
வருகிறார்கள். நாமும் நம் எதிர்ப்பை காட்ட வேண்டும்.

அதிமுகவில் கட்சி சசிகலா குடும்பத்திற்கா அல்லது ஜெயலலிதா குடும்பத்திற்கா என்று சண்டை நடக்கிறது.
திமுகவோ எப்படி ஆட்சியை கலைக்கலாம் என்று கோர்ட், கவர்னர், ஜனாதிபதி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களால் நமக்கு பயன் இல்லை.
நமக்கு நாமே. நம்மை நாம் தான் காப்பாத்திக்கனும்.
நம் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஆளும் வர்க்கத்தின் செவியில் விழும் வகையில் சத்தமாய் குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot