Wednesday, February 1, 2017

உங்கள் மீதும் தேச துரோக வழக்கு பாயலாம் - உஷார்

தேச துரோகிகள் - 8 புது அர்த்தங்கள்.

மெரினாவில் நடந்த கலவரத்திற்கு பின்னர் தேச விரோதிகள் என்ற வார்த்தையின் அர்த்தம் நீண்டு கொண்டே
போகிறது.  அதைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இல்லைனா திடிர்னு போலீஸ் உங்க மேல தேச துரோக வழக்கை போட்டிடுவாங்க.
எதுக்கு ரிஸ்க். வாங்க, அது என்னன்னு பார்ப்போம்.

1) இரண்டு பேர் ஸ்கூட்டரில பின்லேடன் படத்தை காட்டிக்குட்டு போறாங்க?
அதனால, மெரினாவில் இருந்தவர்கள் தேச விரோதிகள் என்று சொல்றாங்க

அவ்வளவு போலீஸ் இருந்தாங்களே, அந்த ஸ்கூட்டரில் பயணம் செஞ்ச இரண்டு பேரையும்.
கைது பண்ணியிருக்க முடியுமேனு கேட்டுடாதீங்க.
அந்த மாதிரி அரசாங்கத்தை மாட்டி விடற மாதிரி கேள்வி கேட்டா, உங்களையும் தேச விரோதிகள்னு சொல்லிடுவாங்க.

எங்கயாவது ரோட்டு ஓரமாய் நின்னு பேசிட்டு இருந்தீங்கணா ரொம்ப கவனமா இருங்க.
அந்த ரோட்டில் பின்லேடன், சதாம் உசேன் போன்றவர்களின் படங்களை எடுத்துக்கிட்டு
யாராவது அந்த ரோட்டில் பயணம் செஞ்சா, உங்களை தேச விரோதிகள்னு சொல்லிடுவாங்க


2)
மாநில அரசும், மத்திய அரசும் உங்களை எவ்வளவு ஏமாற்றினாலும், அவங்களுக்கு எதிரா கோஷம் போடக் கூடாது.
பன்னீர் செல்வம் மிக்சர் சாப்பிட தான் லாய்க்கு.மோடி தாடி வைச்ச கேடி
இதை மாதிரி எல்லாம் கோஷங்கள் எழுப்பினா, உங்களை தேச விரோதிகள்னு சொல்லிடுவாங்க.

3) ஒரு லட்சம் பேர் இருக்கற கூட்டத்தில் யாராவத் ஒருவர் தேச கொடியை எரிக்க முயற்சி செய்தால்,
அங்க தேச விரோதிகள் இருக்காங்கனு, மறுநாள் போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணிடுவாங்க.
எனவே, ஒரு போராட்டம்னா, தேச கொடியும், தீ பெட்டியும், சிகரெட் லைட்டரையும் உள்ளே எடுத்துக்கிட்டு போக அனுமதிக்காதீங்க.
ரொம்ப கவனமா இருக்கனும். யாராவது ஒருவர் தவறு இழைத்தாலும், மறு நாள் எல்லாரையும் ஓட ஓட விரட்டி அடிச்சிருவாங்க.

4)
கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்.
அது மாதிரி மத்திய அரசு எவ்வளவு ஏமாற்றினாலும், எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், கூட்டத்தில்
யாரும் “தனி தமிழ்நாடு” என்று கோஷம் எழுப்ப கூடாது.

எழுப்பினால், ஆதி, லாரன்ஸ் போன்ற ஆட்கள் அரசாங்கம் கிட்ட காட்டி கொடுத்து
அங்க இருக்க எல்லாருக்கும் தேச விரோதிகள் பட்டத்தை வாங்கி கொடுத்துடுவாங்க.

5)
மெரினாவில் போலிஸ் காரங்க துரத்தியதால், கடலை நோக்கி மாணவர்களும் இளைஞர்களும் ஓடினார்கள்.
அவர்களுக்கு உதவ, மீனவர்கள் ஓடி வந்தார்கள். அவங்களுக்கு சாப்பாடு தண்ணி கொடுத்தாங்க.

தேச விரோதிகளுக்கு மீன்வர்கள் உதவிட்டாங்க, அதனால் மீனவர்கள் தேச துரோகிகள் என்று
சொல்லி அவங்க குப்பத்தையே எரிச்சு நாசம் பண்ணிட்டாங்க.

சக மனிசன் ஆபத்தில் இருக்கும் போது, அவனை காப்பாற்ற போனா, தேச விரோதிகள்னு சொல்வாங்க.
கொஞ்சம் நஞ்சம் இருக்கற மனிதாபிமானத்தையும் குழி தோண்டி புதைக்க பாக்கறாங்களே.

6)
மெரினாவில் அமைதியா போராட்டம் நடந்துச்சு. ஏழாவது நாள் போலீஸ் எல்லாரையும் அங்க இருந்து
விரட்டறாங்க. சுற்று வட்டாரங்களில் தீய சக்திகளும், போலீசும் நாச வேலைகளை செய்யராங்க.
அந்த தீய சக்திகள் எல்லாருமே மெரினாவில் இருந்தவர்கள் தான் என்று கட்டுக் கதை சொல்வாங்க.
அதனால், மெரினா போராட்டத்தில் தேச விரோதிகள் இருந்தாங்க என்று சொல்வாங்க.
மெரினாவில் எந்த கலவரமும் நடக்கலை. மெரினாவில் இருந்தவர்களும் கலவரத்தில் ஈடுபடலை
அப்படின்ற உண்மையை நீங்க சொன்னா, உங்களையும் தேச விரோதிகள்னு சொல்வாங்க.

7)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 7 நாட்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டும் தான் பேசனுமாம்.
காவிரி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, கோக் பெப்சியை புறக்கணிப்பது பற்றி எல்லாம் பேசவே கூடாது.
அப்படி பேசினா, அங்க இருக்கற எல்லாரையும் தேச விரோதிகள்னு சொல்லிடுவாங்க.


8 முஸ்லிம்கள் தொழுகை பண்ணும் போது, வெயில் படாம இருக்க இந்து மக்கள் போர்வையால் மூடினா,
பிஜேபி காரங்க கடுப்பு ஆயிடுவாங்க. பன்னீரை ஏவி விட்டு, அடிச்சி துரத்திடுவாங்க.
அங்க இருக்கற எல்லாரையும் தேச துரோகிகள்னு சொல்லிடுவாங்க.


இனி யாரையாவது இந்த அரசாங்கம் “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்துனாங்கனா,
அதை அப்படியே நம்பிடாம, உண்மையை ஆராய வேண்டும் என்பதே மெரினாவில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot