Saturday, February 25, 2017

பன்னீர் தீபா தீபக்கின் அந்தர் பல்டிகள் அம்பலம்

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நிறைய அந்தர் பல்டிகளை பார்க்க முடிஞ்சுது.
அதை பற்றி பார்ப்போம்.

முதலில் தீபா.
தீபா அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குனு சொன்னாங்க.
எம்ஜீஆர் பிறந்தநாள் அன்று பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லைனு சொன்னாங்க.
இப்ப புது கட்சி தொடங்கியதற்கு பின் மீண்டும் ஜெயலலிதா மரணத்தில்  மர்மம் இருக்குனு சொன்னாங்க.

அரசியல் பிரவேசம் குறித்து எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று அறிவிப்பேன் என்று சொன்னாங்க.
ஆனா அறிவிக்கலை.

அரசியல் பிரவேசம் குறித்து ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அறிவிப்பேன் என்று சொன்னாங்க.
ஆனா 10 நாள் முன்னாடியே பன்னீரை சந்திச்சிட்டு நாங்கள் இணைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று
சொன்னாங்க.

அதுக்கு அப்புறம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று புது கட்சி ஆரமிச்சாங்க.
பன்னீருடன் இணைந்து பணியாற்ற போறேனு சொன்னீங்களே, இப்ப புது கட்சி ஆரமிச்சிரிக்கிங்களேனு நிருபர்கள் கேட்டதற்கு,
பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமா தான் சந்தித்தேன் என்று பல்டி அடிச்சாங்க.


அடுத்தது தீபக் பற்றி பார்க்கலாம்.:
சசிகலா கோஷ்டியில் இருந்தார். சசி ஆண்டி ரொம்ப நல்லவங்கனு சொன்னார்.
75 நாளும் ஆஸ்பத்திரியில் தான் இருந்தேன். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லைனு சொன்னார்.
இரண்டு நாள் முன்னாடி மரணத்தில் மர்மம் இருக்குனு சொல்றார்.
சசிகலா, தினகரனுக்கு ஆதரவு இல்லை. பன்னீருக்கு தான் ஆதரவு என்றர்.

அடுத்தது பன்னீர்:
இவர் ஏற்கனவே நிறைய அந்தர் பல்டி அடிச்சிருக்கிறார். ஏற்கனவே சொல்லியிருக்கேன்.
இப்ப இன்னும் இரண்டு.

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தமிழக அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் அறிவிப்பை பன்னீர் வெளியிடுவார்
என்று மாவா பாண்டியராஜன் அறிவித்தார்.
ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏன் அறிவிக்கலைனு நிருபர்கள் கேட்ட போது எனக்கு தெரியாம மாவா பாண்டியராஜன் அப்படி சொல்லிட்டார்னு பல்டி அடிச்சார் பன்னீர்.

ஒரு விஷயத்தை நாம கவனிக்கனும்.
ஏன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிங்கனு கேட்டா, மிரட்டி கையெழுத்து வாங்கிட்டாங்கனு சொல்றாரு.
புரட்சிகரமான அறிவிப்பு வெளியிடுவீங்கனு சொன்னாக்க, ஆனா வெளியிடலையேனு கேட்டா, எனக்கு தெரியாமலே அப்படி ஒரு
தகவலை சொல்லிட்டாங்கனு சொல்றாரு.
”passing the bugs" என்று ஒரு வாக்கியம் பிரபலம்.
நடந்த தவறுக்கு பொறுப்பேற்காமல் அவர் தான் காரணம் என்று வேறோருவரை நோக்கி கை காட்டுவது.
இப்படி ஒரு குணத்தை வைத்திருப்பவர் ஒரு நல்ல தலைவரா?
நீங்களே யோசிங்க.

இன்னோரு பல்டி.
பத்து நாளைக்கு முன்னாடி பன்னீர்செல்வம் பேசும் போது ஒரு தகவலை சொன்னார்.
மக்களை சந்தித்து நீதி கேட்கும் நெடும் பயணம் செய்ய போறோம்.
இன்று மாலை அல்லது நாளை பயண விவரம் வெளியிடுவோம்னு சொன்னார்.

ஆனால் பயண விவரத்தை வெளியிடவில்லை.
இன்னிக்கு பேசும் போது, உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் “நீதி கேட்கும் நெடும் பயணம்” தொடங்கும் என்று அந்தர் பல்டி அடிச்சார்.

இந்த அந்தர் பல்டிகளில் இருந்து ஒன்று மட்டும் நல்லா தெரியுது.
சசி கோஷ்டியிடம் பேரம் பேசி முடிந்த வரை பதவியையும், செல்வங்களையும் பறிப்பதே இவர்கள் நோக்கம் என்று தெளிவாய் தெரிகிறது.

ஈவு இரக்கம் இல்லாமல் வெறும் பணத்திற்காக தான் இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நன்றாக தெரிந்த மீடியாக்கள்
இவர்களுக்கு முக்கியத்துவம் தருவது வேதனை அளிக்கிறது.
எவ்வளவோ நல்ல விஷயம் சொல்லாலம்னு நாங்க திட்டமிட்டாலும், மீடியா மக்களிடம் திணிக்கும்
தவறான செயல்களை வெளிச்சம் போட்டு காட்டறதிலேயே எங்களின் நேரம் செலவாயிது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை எங்கே இருந்தார்கள் இந்த தீபக்கும், தீபாவும்.
இப்போது திடிரென்று எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?
இத்தனை காலம் அவர்களின் வாழ்வாதாரம் என்ன?
ஏன் ஜெயலலிதா இவர்களை தள்ளி வச்சிருந்தார்கள்?

எதற்கும் பதில் இல்லை. ஆனால் இவர்களையும் ஒரு கூட்டம் நம்புகிறது.
இராமனுக்கு பின்னாலும் கூட்டம் இருந்தது , இராவணன் பின்னாலும் ஒரு கூட்டம் இருந்தது.
முருகனுக்கு பின்னாலும் கூட்டம் இருந்தது, சூரனுக்கு பின்னாலும் ஒரு கூட்டம் இருந்தது.
அதனால், இவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருப்பது ஆச்சரியம் இல்லை.

தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் நிகழ வேண்டிய தரூணம் இது.
இப்போது இருக்கின்ற கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய தரூணம் இது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot