Wednesday, February 22, 2017

விகடனின் இரட்டை வேடம் உங்களுக்கு தெரியுமா?

27 செப்டம்பர் 2014 -
சொத்து குவிப்பு வழக்கில் மைக்கேல் டி. குன்கா அவர்கள் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகாரனை குற்றவாளிகள் என்ற தீர்ப்பு சொன்னார்.

11 மே 2015 -
மேல்முறையீட்டில் விசாரனைக்கு பிறகு நீதிபதி குமாரசாமி அவர்களை குற்றவாளிகள் இல்லை என்று விடுவிச்சிட்டார்.

14 பிப்ரவரி 2017 - ஒரு வாரத்திற்கு முன்னர்
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த மேல்முறையீட்டில், மைக்கேல் டி. குன்கா கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தார்கள்.
அதாவது அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள்.

விகடன் பத்திரிக்கை சமீபத்தில் வந்த தீர்ப்பை பாராட்டி எழுதியிருந்தார்கள்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
கீழ்க்கோர்ட்டில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று தீர்ப்பு அளித்த குன்ஹாவையும் பாராட்டியிருந்தார்கள்.

ஜெயலலிதாவை விடுவித்த நீதிபதி குமாரசாமியை கடுமையாய் விமர்சித்து இருந்தார்கள்.
அதிமுக பிரமுகர் தீர்ப்பு எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு தீர்ப்பாக அது இருந்தது.
ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தீர்ப்பையே மாற்றி எழுதி இருந்ததாக சொன்னார்கள்.

இப்ப நீதிபதி குமாரசாமியை கடுமையாய் விமர்சிக்கும் விகடன், அந்த தீர்ப்பு வந்த போது என்ன எழுதியிருந்தாங்கனு பார்ப்போம்.

போன வருசம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால்,
ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆனார்.

மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின.
புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன.
அப்படின்னு சொல்லியிருந்தாங்க.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11-ம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள்,
தமிழ்நாடு அரசாங்கம் செயல்படவே இல்லை. அந்த நாட்கள் தமிழக அரசாங்கத்தின் கறுப்பு நாட்கள்.

ஜெயலலிதா ஆட்சி செய்திருந்தால் இந்த முடக்கம் ஏற்பட்டிருக்காது என்று மறைமுகமாக ஜெயலிதாவிற்கு ஜெ போட்டு கொண்டு
இருந்தார்கள்.

ஆக குமராசாமி தீர்ப்பு பற்றி விகடன் எந்த ஒரு விமர்சனமும் செய்யலை.
குமாரசாமி தீர்ப்பில் ஏகப்பட்ட கூட்டல் கழித்தல் குளறுபடிகள் இருந்தன என்று இன்று சொல்லும் விகடன்
அன்று அதை பற்றி எல்லாம் பேசவே இல்லை. தீர்ப்பு பற்றி கடுகளவு அதிர்ச்சியும் அடையவில்லை.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை.

அப்படினா விகடனுக்கு பயமா?
நெருக்கடியான சூழ்நிலையில் நீதி, நேர்மையின் இருந்து தவறாமல் வாழ்வது தான் மிகவும் அவசியம்.
ஆனால் விகடன் அப்படி நடந்து கொள்ளவில்லையே?

இப்ப எல்லாரும் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் விமர்சிப்பதால் இவர்களும் விமர்சிக்கிறார்கள்.
இது தான் பத்திரிக்கை தர்மமா?

விகடன் மட்டும் இல்ல. பல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஜெயலலிதா இருந்த வரை அவரை விமர்சிக்க பயந்தார்கள்.
ஜெயலலிதாவின் ஊழல் பற்றி பேச பயந்தார்கள்.
சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அராஜகத்தை பற்றி பேசாமல் மவுனமாய் இருந்தார்கள்.

அன்றைக்கே அவர்கள் தைரியமாக செயல்பட்டிருந்தால், பத்திரிக்கை தர்மத்துடன் நடந்திருந்தால்,
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஊழல் குறைஞ்சிருக்குமே?
சசிகலாவிடம் இவ்வளவு பண பலம், அதிகார பலம் வந்து இருக்காதே?
சசிகலா குடும்பத்தினர் இவ்வளவு சொத்துகளை சேர்த்திருக்க மாட்டார்களே?

இனியாவது பத்திரிக்கை தர்மத்தை காப்பார்கள் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot