Monday, February 20, 2017

ஸ்டாலினின் சதி திட்டம் அம்பலம்

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையின் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது,
ஸ்டாலினின் திட்டம் என்ன என்பது தெளிவாய் தெரிந்தது.
என்ன அந்த திட்டம்?
வாங்க பாக்கலாம்.

முதல் திட்டம்:
பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்து தனி கோஷ்டியாக மாறினார்.
அவர் பின்னால் 11 எம்.எல்.ஏக்களும் 12 எம்.பிக்களும் வந்தார்கள்.
பன்னீருக்கு பின்னால் இயக்குவது பிஜேபி என்று அனைவரும் அறிந்ததே.
இந்த கூட்டணியில் திமுகவும் இருக்கிறார்கள் என்பதே என்னுடைய கணிப்பு.

இரண்டாவது திட்டம்:
இதை பார்ப்பதற்கு முன்னர் 1988க்கு போகனும்.
எம்.ஜி. ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக உடைந்து ஜெ அணி, ஜா அணி என்று இரு அணி உருவானது.
ஜனவரி 28 1988 இல் ஜானகியின் அரசு நம்பிக்கை தீர்மானத்தின் வாக்கெடுப்பை சந்தித்தார்கள்.
ஜானகி அதில் வெற்றி பெற்றாலர். ஆனால் சட்டசபையில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது.
காட்டு மிராண்டி தனமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள்.
சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மண்டை உடைந்தது.
சட்டசபைக்குள் காவல்துறையினர் வர கூடாது. ஆனால் சபைக் காவலர்களால், அங்கு நடந்த
வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், காவல் துறையினர் உள்ளே வந்து
லத்தியால் அடித்து எல்லாரையும் கலைத்து விட்டார்கள்.

ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்து இருந்தாலும், சட்டசபையில் நடந்த
வன்முறையை காரணமாக சொல்லி, மத்திய அரசு ஜானகியின் அரசை கலைத்து விட்டு, ஜனாதிபதியின் ஆட்சியை
அமல்படுத்தியது. ஒரு வருட ஜனாதிபதியின் ஆட்சிக்கு பிறகு ஜனவரி 1989 இல் தேர்தல் நடந்தது.

அதிமுக உடைந்த காரணத்தால் ஜெ அணியும், ஜா அணியும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தார்கள்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன.
அதிமுகவினால் ஏற்பட்ட பிளவால் அதிமுகவின் வாக்குகள் சிதைந்தது. அதனால் திமுக ஆதாயம் அடைஞ்சாங்க.
மொத்தம் இருந்த 232 தொகுதிகளில் திமுக 150 இடங்களை கைப்பற்றியது.
ஜெ அணி 27 இடங்களையும், ஜா அணி 2 இடங்களையும் பெற்றார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அதிமுக உடைந்தது, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது
வன்முறை நிகழ்ந்தது, ஜனாதிபதி ஆட்சி அமைந்தது. அதன் பின் நடந்த தேர்தலில் அதிமுக இரு பிரிகளாய் போட்டியிட்டது,
திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதையே தான் திமுக இப்பவும் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1988 இல் நடந்த வன்முறையை போல், திமுக வன்முறை செய்வார்கள் என்பதை உளவுத்துறை மூலமாக அதிமுக அறிந்து கொண்டார்கள்.
அதனால் தான் திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட போதும், ஒரு அதிமுக எம்.எல்.ஏ கூட தங்கள்
இடத்தில் இருந்து எழுந்திருக்கவோ அல்லது வாயை திறக்கவோ இல்லை. பதவியை காப்பாற்றிக் கொள்ள அரசியல்வாதிகள்
வன்முறையும் செய்வார்கள், தேவைப்பட்டால் புத்தரை போல் அமைதியாகவும் இருப்பார்கள் என்பதை நாம் அன்று பார்க்க முடிந்தது.

பன்னீர் கோஷ்டிக்கும், எடப்பாடி கோஷ்டிக்கும் தான் பிரச்சனை. சட்டசபையில் சண்டை நடந்திருந்தா அவர்களுக்குள் தானே
ஏற்பட்டிருக்கனும். ஏன் திமுக சம்பந்தமே இல்லாமல் வன்முறையில் இறங்கினார்கள் என்ற கேள்விக்கும் இது தான் பதில்.
ரகசிய வாக்கெடுப்பிற்கு ஆளும் கட்சியை சேர்ந்த சபாநாயகர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பது தமிழ்நாட்டில் இருக்கும்
சிறு குழந்தைக்கும் தெரியும். நிச்சயமா கிடைக்காது என்று தெரிந்ததை கேட்கனும், பின்னர் வன்முறையில் இறங்கனும், அதிமுக
எம்.எல்.ஏக்களை தூண்டி விட்டு அவர்களையும் வன்முறையில் இறங்க வைக்கனும், சட்டசபையை கலவர பூமியாக ஆக்க
வேண்டும், ஜனாதிபதி ஆட்சி வரனும், அதுக்கு அப்புறம் தேர்தல் வரனும் என்பது தான் ஸ்டாலினின் திட்டம்.

ஆனால் அவர் எதிர்பாராத விதமாய் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைதியாக இருந்தார்கள்.
விரக்தியினால் சபாநாயகரை தாக்கினார்கள். சட்டையை கிழிச்சாங்க.

சபாநாயகர் முன்னாடி இருந்த மைக்கை உடைச்சாங்க.
சபாநாயர்கர் மேடையில் இருந்த ஆவணங்களை கிழிச்சி எறிஞ்சாங்க.
சபாநாயகர் முன் இருந்த table தூக்கி போட்டு உடைச்சாங்க.
சபாநாயகர் நாற்காலியில் திமுக எம்.எல்.ஏக்கள் உட்கார்ந்தாங்க.

இதனால் அவைக்காவலர்கள் மூலம் திமுகவினர் வெளியேற்றப்பட்டார்கள்.
ஸ்டாலின் தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டது, சினிமாகாரனை போல் சட்டையை கழற்றி விட்டு பனியனுடன்
வீரமாய் நடந்து வந்தது அதையேல்லாம் நீங்க பார்த்திருப்பீங்க.
எல்லாமே திமுகவின் திட்டமிட்ட டிராமா தான்.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறார்கள்.

மக்கள் கவனமாக இருக்கனும்.
2011 இல் திமுக ஏன் படுதோல்வி அடைந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள்.
2 ஜி ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் நிலங்களை பறித்தது, அழகிரியின் கட்டபஞ்சாயத்து, அரசு நிர்வாகத்தில் ஊழல்
இன்னும் பல காரணங்களினால் தான் அன்று திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்.
2014, 2016 இல் லும் தோல்வி தான்.

நமக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம்.
மன்னார்குடி மாவியாவும் வேண்டாம், கோபாலபுரம் மாவியாவும் வேண்டாம்.
அதை என்னிக்குமே மறக்க கூடாது.
வர போகும் தேர்தலில் நம் இளைஞர்களுக்கு வாக்களிப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot