Tuesday, April 11, 2017

தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலி. திடுக்கிடும் ஆதாரங்கள்

ஏப்ரல் 4ம் தேதி எங்களின் வீடியோவில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு நிறைய வாய்ப்ப்புகள் இருக்கிறது என்று சொல்லியிருந்தோம். எதிர்ப்பார்த்தபடி தேர்தல் ஆணையம்
ஏப்ரல் 9ம் தேதி தேர்தலை ரத்து செய்தது.

தேர்தல் ஆணையம் நேர்மையாய் இருந்தால் தான் தேர்தல்கள் நேர்மையாய் நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடக்கும் சம்பங்களை கவனித்தால், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவது தெளிவாய் தெரிகிறது. இதோ வருகிறது ஆதாரங்கள்.

1) பிப்ரவரி 7ம் தேதி பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்து அதிமுகவை உடைக்கும் பணியை துவக்குகிறார்.
அடுத்த நாளே அதாவது பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் கமிசன் அதிமுகவிற்கு நோட்டிஸ் அனுப்பறாங்க. சசிகலா எந்த விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலராய் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். கேட்டதில் என்ன தவறு என்று கேக்கறீங்களா? கேட்டதில் தவறில்லை? ஆனால் எப்போது கேட்டார்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.

டிசம்பர் 29ம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலளராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நியமனம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக இருப்பதால் இது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதிமுகவின் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கிறார். கிட்டத்தட்ட 40 நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், பன்னீர் தியானம் செய்த அடுத்த நாளே சசிகலாவிற்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கையில் இருக்கும் பொமை தானே?

2) ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம், கல்வி நிறுவனங்கள், உறவினர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை செய்தார்கள். எந்த எந்த அமைச்சர் எந்த எந்த வார்டில் எவ்வளவு மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த ஆவணம் கிடைத்தது. 89 கோடி ரூபாய் விநியோகிக்க இருப்பதாகவும்
குறிப்பிடப்ப்ட்டிருந்தது.  தேர்தலை ரத்து செய்வதற்கு இந்த ஆவணமும் ஒரு முக்கிய ஆதாரம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறார்கள்.

2014 இல் சகாரா மற்றும் பிர்லா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் கிடைக்கிறது. குஜராத் முதலமைசருக்கு 40 கோடி தரப்பட்டுள்ளது என்று சகாராவின் ஆவணத்திலும், 25 கோடி தரப்பட்டுள்ளது என்று பிர்லாவின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்தவர் மோடி. common cause என்ற அமைப்பின்
சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து பிரதமர் மோடி மீது விசாரனை கமிசன் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

னோட்புக்கில் எழுதி வைத்திருப்பது, கம்யுட்டரில் டைப் செய்து print out எடுத்திருப்பது, இமெயில்களி printout - இவை எல்லாம் சட்டப்படி ஆதாரமாய் கருத முடியாது என்று சொல்லி வழக்கை சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டார்கள்.

ஆனால் இதை போன்று ஒரு ஆவணத்தை தான் தேர்தல் ஆணையம் ஆதாரமாய் காட்டி ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்திருக்கிறார்கள். இப்ப சொல்லுங்க. தேர்தல் ஆணையம் யார் கையில் இருக்குதுனு  தெரியுதா?

3) சமீபத்தில் நடந்த உத்திரபிரதேச தேர்தலில் கூட தான் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டிருக்கிறது. CMS என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் திடுக்கிடும தகவல்கள் வெளிவந்தன.
மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களுக்கு ஒட்டுக்கு நோட்டு கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாக்காளருக்கு 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை பணம் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியிலும், இப்போது ஆர்.கே.நகர் தொகுதியிலும்
பண பட்டுவாடா செய்த காரணத்தினால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தார்கள். ஆனால் பண பட்டுவாடா செய்த உத்திரபிரதேசத்தில் ஒரு தொகுதியில் கூட தேர்தலை ரத்து செய்யவில்லையே.

இப்ப சொல்லுங்க. தேர்தல் ஆணையம் யாரிடம் அடிமையாய் இருக்கிறதுனு தெரியுதா?

4) ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ இல்லை என்றால், 6 மாதத்திற்குள் இடைதேர்தல் நடத்திட வேண்டும். டிசம்பர் 5ம் தேதில் ஜெயலலிதா இறந்தார். ஜூன் 5ம் தேதிக்குள் புது எம்.எல்.ஏ பதவியேற்க வேண்டும். 6 மாதற்திற்குள் நடத்தும் சூழ்நிலை இல்லை என்றால், அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் நடத்த வேண்டும். இப்போது தேர்தல் ஆணையம் அதிகப்பட்ச காலத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதாவது ஒரு வருடத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன் அவ்வளவு காலம் ஆகும் என்று முடிவு செய்தார்கள்? மீண்டும் தேர்தல் நடக்கும் போது பண விநியோகம் நடக்காது என்று தேர்தல் ஆணையம் எப்படி முடிவு செய்தார்கள்? ஏதாவது கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வருவாங்களா?

அடுத்தது என்ன நடக்கும். பிஜேபி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பன்னீசெல்வத்தை முதல்வர் ஆக்க வேண்டும். மதுசூதனை பொதுசெயலாளர் ஆக்க வேண்டும் என்று மிரட்டுவார்கள். தினகரன் அதை ஏற்க மாட்டார். 

‘ஏன் உங்களை வேட்பாளர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று விளக்கம் கேட்டு தேர்தல்
ஆணையம் தினகரனுக்கு நோட்டிஸ் அனுப்புவார்கள்.

பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று சொல்லி தினகரனை தகுதி நீக்கம் செய்வார்கள். மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்வார்கள்.

சசிகலா, தினகரன் மீது மக்களுக்கு இருக்கும் கடும் கோபத்தை பயன்படுத்தி இன்னும் எத்தனை  உண்மைகளை மத்திய அரசு நம்மிடம் மறைப்பார்கள் என்று தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது என்பதை பற்றி தான் நாம் இப்போது கவலைப்பட
வேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தல் ஒரு முக்கியமான நிகழ்வு. 5 ஆண்டுகளுக்கு நாட்டை யார் ஆள்வது என்று முடிவு செய்வது தேர்தல் தான். அந்த தேர்தலின் வாக்கு எந்திரங்களில் இவர்கள் முறைகேடு செய்ய மாட்டார்கள்  என்பதை இனிமேல் எவ்வாறு நம்ப முடியும். எந்த நம்பிக்கையில் இனிவரும் தேர்தல்களில் ஓட்டு போட முடியும்?

உங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot