Friday, April 7, 2017

ஆசை காட்டி மோசம் செய்த ஜியோ. மூன்று மாத இலவச சேவை ரத்து

கடந்த வாரம் ரிலையன்ஸ் ஜியோ எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்கள். மார்ச் 31ம் தேதி முடிந்த இலவச சேவையை ஏப்ரல் 15 வரை நீடித்தார்கள். அது மட்டும் அல்ல.

99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஜியோ பிரைம் மெம்பர் ஆன பிறகு,
ஏப்ரல் 15ம் தேதிக்குள் 303 ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஜீயோவின் இலவசங்கள் தொடரும் என்று சொல்லியிருந்தார்கள்.
jio summer surprise என்று அதற்கு பெயரும் சூட்டினார்கள்.

அதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு இப்போது தடை ஏற்பட்டுள்ளது.

நேற்று ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார்கள். TRAI(Telecom Regulatory Authority of India) ஜியோவின் மூன்று மாத இலவச சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்கள்.

ஜியோ நிறுவனம் TRAi இன் கட்டளையை ஏற்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நடைமுறை சிக்கல் உள்ளதால் அடுத்த ஒரிரு தினங்களில் சேவையை முடித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே summer surprise சேவையில் இணைந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசங்கள் உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 15 வரை நேரம் இருக்கிறது. பொறுமையாக ரீசார்ஜ் செய்து jio summer surprise ஐ பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி செய்து. எனினும் நடைமுறை சிக்கல் உள்ளதால் சேவையை முடிக்க ஒரிரு தினங்கள் ஆகும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இன்று ரீசார்ஜ் செய்தால் jio summer surprise சேவையை பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனினும் அதை திட்டவட்டமாய் சொல்ல முடியாது.

ஜியோவிற்கு TRAI யிடம் இருந்து இப்படி ஒரு கட்டளை வருவது இது முதல் முறை அல்ல. கடந்த டிசம்பர் 31 வரை ஜியோ சேவை இலவசம் என்று கூறியிருந்தார்கள். 90 நாட்களுக்கு மேல் இலவச சேவைகள் தர கூடாது, உடனடியாக நிறுத்துங்கள் என்று TRAI சொல்ல டிசம்பர் 3ம் தேதி இலவச சேவையை ரிலையன்ஸ் முடித்தார்கள்.

ஆனால் happy new year offer என்ற பெயரில் மார்ச் 31 வரை இன்னொரு மூன்று மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தார்கள்.

கிட்டத்தட்ட 13 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவிடம் வந்து விட்டார்கள். இன்னும் சில கோடி பேரை இழுக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தால், வேறு ஒரு பெயரில் மீண்டும் இலவச சேவையை
வழங்குவார்கள் என்று தான் நினைக்கிறேன்.

இதற்கு TRAI ம் உடந்தை தான்.
மோடியின் சொல்லை மீறி TRAI ஆல் என்ன செய்து விட முடியும்?

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot