Saturday, April 8, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான போர்? சுவிடனில் தாக்குதல்

உலகத்தின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை எடுத்தால் சுவிட்சர்லாண்ட், நார்வே, சுவிடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளே
முன்னிலையில் இருக்கும்.

உலகத்தில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலை எடுத்தால் ஜரோப்பிய நாடுகளே முன்னிலையில் இருக்கும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் படிப்பு மற்றும் மருத்துவம் இலவசம். இதனால் அங்கு மக்கள் கவலையில்லாமல் வாழ்கிறார்கள்.

எங்கேயாவது அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால், அங்கே அமெரிக்காவின் கவனம் திரும்பும். குழப்பங்கள் இருந்தால் தானே நாட்டாமை பஞ்சாயத்து செய்ய முடியும். குழப்பமே இல்லைனா, நாட்டாமைக்கு என்ன வேலை?

இதனால் ஜரோப்பாவின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் குலைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய
ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தது. அந்த வரிசையில் நேற்று சுவிடனில் தாக்குதல் நடந்தது. ஒரு பெரிய சரக்கு லாரியை கடத்தி மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கடை தெருவில் ஒட்டி சென்று, 5 பேரை கொன்று இருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளார்கள்.

isis தீவிரவாதிகளை தங்கள் அடியாட்களாக அமெரிக்கா பயன்படுத்திக் தங்களின் காரியங்களை சாதித்துக்
கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவின் நிம்மதியை கெடுப்பதன் மூலம் அமெரிக்கா அடையப்போகும் ஆதாயம் என்ன? ஐரோப்பா பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். பெரும்பான்மை மக்கள் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தலாய் பார்ப்பார்கள். முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற குரல் எதிரொலிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவின் உதவியை நாடுவார்கள். அமெரிக்கா உள்ளே நுழைந்து விட்டால், கதை முடிஞ்சுது. அமெரிக்கா காலடி வைத்த அப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகளில் நிலைமை எப்படி
இருக்கிறது என்பது எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.

உலகில் இன்று கிறுஸ்துவ மதம் முதல் இடத்திலும், இஸ்லாம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் அவர்கள் வளர்ந்தால்,
அடுத்த 20 ஆண்டுகளில் முதல் இடத்தை பிடிப்பார்கள்.

இதை அமெரிக்கா விரும்பவில்லை. கிறுஸ்துவ மதம் வீழ்ச்சி அடைய கூடாது என்பதிலும், இஸ்லாம் வளர கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் சித்தரிப்பதும், முஸ்லிம் நாடுகளை குறி வைத்து தாக்குவதும், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவை தாக்குவதும், அமெரிக்கா, இந்தியா மற்றும் இன்னும் பல நாடுகளில் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில்
ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இது தான் காரணம்.

இந்தியாவில் மோடியும், அமெரிக்காவில் டிரம்பும் பிரதமர் ஆனதுக்கு பின்னனியில் இருக்கும் காரணம் இது தான். இருவருமே முஸ்லிம்கள் அனைவருமே கெட்டவர்கள் என்று சித்தரித்து, பெரும்பான்மை மக்களை அச்சுறுத்தி அவர்கள் வாக்குகளை மொத்தமாய் பெற்று ஆட்சியை பிடித்தவர்கள்.

இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. நீதி விசாரனை வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா பல நாடுகளில் இதுவரை பல லட்சம் முஸ்லிம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. ஜக்கிய நாடுகள் அமெரிககவின் இந்த கொடூர செயல்களை தடுத்ததா? கேள்வி கேட்டதா? இல்லையே. கேட்கவே மாட்டார்கள்.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னர், முஸ்லிம் மக்கள் மீது  இந்த அளவு எதிர்ப்பு உணர்வு இருந்ததா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இது எல்லாம் திட்டமிட்டு நடத்தப்படும் சம்பவங்கள் என்பது நமக்கு புரியும்.

உலகம் முழுக்க ஏகப்பட்ட பிரச்சனைகள். பெரும்பாலான நாடுகளில் பதற்றமான சுழ்நிலை நிலவுகிறது மத வேறுபாடின்று மக்கள் ஒற்றுமையாக இருந்து உலகெங்கும் அமைதி நிலவ இறைவனை வேண்டிக் கொள்வோம்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot