Saturday, April 8, 2017

ஆர்.கே.நகரில் அரங்கேறிய கேலி கூத்துகள்

பன்னீர்செல்வமும் அமைச்சர் விஜயபாஸ்கரும் கடந்த சில வாரங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாய் தாக்கி பேசுகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிக்க வேண்டும்.
சுகாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரித்தால் உண்மை தெரியும் என்றார் பன்னீர்செல்வம் .

எந்த விசாரனைக்கும் நாங்கள் தயார். ஆனால் முதலில் பன்னீர்செல்வத்தை தான் விசாரிப்பார்கள். மரணத்தில் ஏதாவது மர்மம் இருந்தால் அதற்கு பன்னீர் தான் பொறுப்பு என்றார். இப்படி இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் அவர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.

வியாழன் இரவு நடிகர் சரத்குமார் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். மறுநாள் அதிகாலை அவர் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடக்கிறது. டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில மணி நேரத்தில் சோதனை நடந்திருக்கிறது. அதற்குள் சரத்குமார் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வருமானவரித்துறை முடிவு செய்தார்கள்ம் என்று தெரியவில்லை.

சரத்குமார் பன்னீசெல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வரையில் அவர் வீட்டில் சோதனை நடக்கவில்லை. பன்னீரை விட்டு விலகிய ஒரு சில மணி நேரத்தில் சோதனை நடக்கிறது. உத்தமராய் இருந்த சரத்குமார் ஒரு சில மணி நேரத்தில் திருடனாய் மாறியது எப்படி?

பன்னீர்செல்வம் உத்தமரா, அவர் கோஷ்டியில் இருக்கும் மாவா பாண்டியராஜன் உத்தமரா? மைத்ரேயன் உத்தமரா? எல்லாருமே கூட்டு களவாணிகள் தானே? அவர்களிடம் வருமான வரி சோதனை ஏன் நடத்தவில்லை?

இதில் இருந்த என்ன தெரிகிறது?
பன்னீருக்கு எதிராக செயல்பட்டால் வருமானவரி சோதனை நடக்கும் என்று மோடி அரசு மிரட்டுவது தெளிவாய் தெரிகிறது. நீ கொள்ளை அடி, ஊரை அடிச்சி உலையில் போட்டுக்கோ, அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. பன்னீர் பக்கம் வந்து நின்னுடுங்க. இல்லைனா உங்களை நிம்மதியா விட மாட்டோம் என்று மோடி அரசு எச்சரிக்கை விடுவது தெளிவாய் தெரிகிறது.

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த போது, மோடி என்ன சொன்னார் தெரியுமா? அரசியல்வாதிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது
என்று தெரியாமல் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். எல்லாரும் பணத்தை கங்கையில் போடுகிறார்கள், எரிக்கிறார்கள் என்றெல்லாம் கதை விட்டார்.

அப்படி இருக்க, தினகரன், பன்னீர், ஸ்டாலின் மூன்று பேரிடமும் எப்படி இவ்வளவு கோடி ரூபாய் பணம் வந்தது. பணத்தை தினகரன் வாரி இறைக்கிறாரே. தலைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை தருகிறாரே.
எப்படி இவ்வளவு பணம் வந்தது? மோடியின் திட்டம் தோல்வி என்று பிஜேபி ஒப்புக் கொள்வார்களா? ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டம் அரசியல்வாதிகளையும், செல்வந்தர்களையும் எந்த வகையிலும்  பாதிக்கவில்லை என்று மோடி வெளிப்படையாய் சொல்வாரா?

தினகரன் தரப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்களுக்கு பணம் வினியோகம் செய்து விட்டார்கள். மீதி மக்களுக்கும் தேர்தலுக்கு முன்னாடி வினியோகம் செய்து விடுவார்கள். தேர்தல் நடந்தால் தினகரன் வெற்றி பெறுவது உறுதி.

அப்படி நடந்து விட்டால், பிஜேபியின் ஒட்டுமொத்த திட்டமும் தோல்வி அடைந்து விடும். அதை தடுத்து ஆகனும்.
அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியாச்சு. எந்த எந்த அமைச்சர் எந்த எந்த வார்டில் எவ்வளவு மக்களிடம் பணம் வினியோகிக்க வேண்டும் என்ற விவரங்கள் இருந்த ஆவணத்தையும் பிடித்து விட்டதாய் சொல்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இது தேர்தல் ரத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

எல்லாரும் சேர்ந்து பதவி வெறியால் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். மக்கள் வறுமையை பயன்படுத்தி அவர்களையும் காசு வாங்க செய்து கலங்கப்படுத்தி விட்டார்கள்.

சிபிஐ, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம், ,சூப்ரிம் கோர்ட் நீதிபதிகள் ஆகிய அனைவருமே மத்திய அரசின் பொம்மைகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இது நாட்டை அழிவு பாதையில் தான் அழைத்து செல்லும்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot