Monday, April 3, 2017

3400 டாஸ்மாக் கடைகள் மூடல். குடியை நிறுத்த முடியுமா?

மார்ச் 31ஆம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் சொல்லியிருக்காங்க.

இதனால், தமிழகத்தில் உள்ள 3400 மதுகடைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் மூடப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா பதவியேற்ற போது 500 கடையும், எடப்பாடி பதவியேற்ற போது 500 கடையும் மூடினார்கள்.
மொத்தம் உள்ள 6500 டாஸ்மாக் மதுகடைகளில் 4400 கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. தற்போது தமிழத்தில் 2100 கடைகள் தான் இருக்கிறது. அதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மார்க் கடைகளில் நீண்ட வரிசையை காணமுடிகிறது.

ஏற்கனவே 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழக தத்தளிக்கிறது. டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தில் தான் தமிழகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.அதனால் கடைகளை விரைவில் வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்.

இதை பற்றி உங்களின் கருத்து என்ன?
நீங்கள் மது அருந்துவீர்களா?
எப்போது மது அருந்த தொடங்கினீர்கள்?
ஏன் மது அருந்த தொடங்கினீர்கள்?
பூரண மதுவிலக்கு வந்தால், நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?
உங்களின் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

நான் என்னுடைய பதில்களை சொல்கிறேன்.
என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன்.
என்னுடைய நண்பர்கள் சில பேர், “நீ பீர் சாப்பிட்டா குண்டு ஆகிவிடலாம் என்று சொல்ல நானும்
பல மாதங்கள் யோசித்தேன்”

“எங்கள் வீட்டில் யாரும் மது அருந்த மாட்டார்கள். மது அருந்துவது தப்பு என்பது தான் என் மனதில் இருந்தது. அதனால் தான் பல மாதங்களாக இது குறித்து யோசித்தேன். கடைசியில் பீர் குடிக்கலாம் என்று முடிவு செய்ய அப்போது தொடங்கியது மது பயணம். கல்லூரி காலங்களில் மாதம் ஓரு பீர் சாப்பிடுவேன். வேலைக்கு சேர்ந்த பிறகு மாதம் ஒரு முறை தான் என்றாலும், ஒரு பீருடன் நிறுத்தாமல் இன்னும் சில மது வகைகளையும் அருந்தினேன்.

வாழ்க்கயில் ஒரு பிடிப்பு இல்லாத உணர்வு தோன்றும் போதும்,
அலுவலகத்தில் சில தோல்வியான நாட்களின் போதும் அதில் இருந்து மீண்டு வர மது அருந்துவேன்.

“என்னடா இது வாழ்க்கை. இங்கே வந்தோம், வாழ்ந்தோம், போனோம். இது தான் வாழ்க்கையா? ஜெயிக்கனும் ஜெயிக்கனும்னு ஒடிக்கிட்டு இருக்காங்களே. இது தான் வாழ்க்கையா?
எது தான் வாழ்க்கை?” என்ற குழப்பம் என்னை வாட்டி எடுக்க விடை தேட தியான உலகத்திற்கு வந்தேன். எந்த கார்ப்பரேட் சாமியாரிடமும் நான் தியானம் கற்றுக் கொள்ளவில்லை.
இவ்வுலகில் இப்போது இல்லாத மத குருக்கள் தான் எனக்கு வழி காட்டினார்கள்.

தியானம் செய்வது பிடித்து போனது. மது அருந்துவதை நிறுத்தி விட்டேன். கடந்த நான்கு வருடஙகளாக மது அருந்தாமல் தான் இருக்கிறேன். அந்த எண்ணமே இப்போது தோன்றுவதில்லை.
வாழ்க்கையில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், அதில் இருந்து விடுபட நான் மதுவை நாடுவதில்லை. தியானத்தை தான் நாடுவேன். பைசா செலவில்லாமல் இருந்த இடத்திலேயே கவலை நீங்கி அமைதி மலர்ந்து விடும்.

நீங்கள் மது அருந்துவீர்களா?
எப்போது மது அருந்த தொடங்கினீர்கள்?
ஏன் மது அருந்த தொடங்கினீர்கள்?
பூரண மதுவிலக்கு வந்து விட்டால், நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?
உங்களின் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot