Friday, April 14, 2017

ருசியான சீரக சாதம் செய்வது எப்படி | வாங்க சமைக்கலாம்

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
தண்ணீர் - 1.5 கப்
எண்ணெய் -2-3 டேபில் ஸ்பூன்
சீரகம் - 1-2 டேபில் ஸ்பூன்
பட்டை- 1 இஞ்ச்
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
இஞ்சி - 2 இஞ்ச்
பூண்டு - 6-8
பச்சை மிளகாய் - 2-4
வெங்காயம் - 1 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
தயிறு - 1/4 கப்

செய்முறை:
1) அரிசியை கழுவி 20 முதல் 30 நிமிடம் வரை ஊர வைக்கவும்.

2) இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3) சுடான எண்ணெயில் சீரகம், லவங்கம், பட்டை, ஏலக்காயை போட்டு வெடிக்க விடவும்.

4) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக 5 நிமிடம் வதக்கவும்.

5) இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6) உப்பு மற்றும் தயிரை சேர்த்து சுமார் ஒர் இரு நிமிடம் கலறவும்.
  பிறகு தேவையான அளவு தண்னீரை சேர்த்து கொதிக்க விடவும்.

7) கொதிக்கும் நீரில் ஊறவைத்த அரிசியை சேர்த்து உப்பை சரி பார்த்து விட்டு பாத்திரத்தை மூடவும். ( உப்பு சிரிது அதிகமக இருக்கா வேண்டும்).

8) குறைந்த தீயில் 12- 15 நிமிடம் வேக விடவும்.

9) 12 நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, சாதத்தை
  கலறவும்.

10) சிறிது தண்ணீர் இருந்தால், பாத்திரத்தை மீண்டும் மூடி சிறிது நிமிடங்கள் வேக வைக்கவும்.

11) சுட சுட சீரக சாதம் தயார்!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot