Tuesday, April 4, 2017

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து? திடுக்கிடும் திட்டம்

திமுகவிற்கும், பாஜகவிற்கும் ஆர்.கே.நகர் ஒரு முக்கியமான தேர்தல். பாஜக பல்வேறு நெருக்கடிகளை சசிகலா கோஷ்டிக்கு கொடுத்து வருகின்றது. மறுபக்கம் பன்னீரை செல்ல பிள்ளையாய் வளர்க்கிறது. Y category பாதுகாப்பு எல்லாம் கொடுத்து பன்னீர் என்ற செல்ல குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்கிறது.

ஆர்.கே.நகர் முழுக்க தினகரனுக்கும், சசிகலாவிற்கும் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதை பற்றி சற்றும் கவலைப்படாமல் தினகரன் தன்னையே வேட்பாளராய் அறிவித்தார். பிஜேபி எவ்வளவு நெருக்கடிகள் தந்தாலும் பரவாயில்லை, எங்களிடம் இருக்கும் பணத்தை நம்பி களம் இறங்கி இருக்கிறேன் என்று வந்துள்ளார் தினகரன்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல அதிமுகவினர் எந்த முறையில் பணம் விநியோகிப்பார்கள் என்பது பன்னீர்செல்வத்திற்கு நன்றாகவே தெரியும். அதை எல்லாம் தன் எஜமானன் பிஜேபியிடம் சொல்ல, அவர்களும் பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாய் வேலை செய்கிறார்கள்.

துணை ராணுவத்தை ஆர்.கே.நகரில் குவித்து இருக்கிறார்கள்.
சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் மாற்றப்பட்டார். இது தவிர பல போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டார்கள்.

ஆனால் தினகரன் தரப்போ புது புது வழிகளில் வாக்காளர்களிடம் பணம் விநியோகித்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக கடைசி 2,3 நாட்களில் தான் பணம் கொடுப்பார்கள். ஆனால் அது வரை பொறுத்திருப்பது பெரிய ரிஸ்க் என உணர்ந்த தினகரன் தரப்பு தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பணம் விநியோகிக்க தொடங்கி விட்டார்கள்.

ஒரு கதவை மூடினால், வேறு ஏதாவது கதவை திறந்து விடுகிறது தினகரன் கோஷ்டி. மக்களை தொகுதியில் இருந்து வெளியில் அழைத்து வந்து பணம் கொடுக்கிறார்கள். இது தவிர நகைக்கடையில் நகை வாங்கி கொள்ள ரசீது கொடுக்கிறார்கள்.
பாத்திர பண்டங்கள் வாங்கி கொள்ள ரசீது கொடுக்கிறார்கள்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொள்ள ரசீது கொடுக்கிறார்கள்.

இப்படி பல நூதன முறைகளில் பண விநியோகம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மூளையை எல்லாம் மக்கள் நலனுக்காக செலவழித்தால், இந்நேரம் தமிழகம் சொர்க்க பூமி ஆயிருக்கும்.

கங்கைஅமரன் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். முடிந்த வரை ஓட்டை பிரித்து பன்னீரையோ, திமுகவையோ ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது தான் கங்கை அமரனுக்கு தரப்பட்டிருக்கும் வேலை.

இருந்தாலும் பிஜேபி தரப்பு நடுக்கத்தில் தான் இருக்கிறார்கள்.
பணத்தை வாங்கி கொண்டு மக்கள் தினகரனை ஜெயிக்க வைத்து விட்டால், பிஜேபியின் ஒட்டு மொத்த திட்டமும் தவிடு பொடி ஆகி விடும். சசிகலாவுடன் இணைந்து ஜெயலிதாவை கொன்றதும் வீணாய் போய் விடும்.

அது என்ன பிஜேபியின் திட்டம்?
பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக வேண்டும். பன்னீர்செல்வம் மூலமாக அதிமுகவை அழிக்க வேண்டும். தமிழகத்தில் இனி திமுகவிற்கு இருக்கும் ஒரே மாற்று பாஜக தான்  என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

தினகரன் வென்று விட்டால், இது எதுவும் நடக்காது. தினகரன் வென்று விட்டால், அந்த கோஷ்டியில் இருந்து இனி எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் தாவ மாட்டார்கள். தொகுதி முழுக்க எதிர்ப்பு அலை வீசும் போதும், இவர் ஜெயித்து விட்டாரே, இவர் தலைமையில்
செயல்படுவதே நல்லதோரு எதிர்காலத்தை தரும் என்று அவர்கள் முடிவெடுத்து விடுவார்கள்.

மக்களிடம் பணம் சென்று விட்டது என்பது உறுதியானால், பிஜேபிக்கு தேர்தலை ரத்து செய்வதை தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால், இப்போது ஆர்.கே.நகர் களத்தில் மக்கள் மனநிலை தினகரனுக்கு எதிராக இருக்கிறது. இந்த விளையாட்டை இதொடு முடித்து கொண்டால் தான் தங்களுக்கு நல்லது என்று பிஜேபிக்கு தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் இருக்கும்
கடைசி பிரமாஸ்திரம், தேர்தல் ரத்து தான். பண விநியோகம் நடக்கிறது என்று கூறி தேர்தலை ரத்து செய்வார்கள்.

என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot