Saturday, April 8, 2017

பாரதிய ஜனதாவின் இனவெறி அம்பலம்

சில தினங்களுக்கு முன்னர், உத்திரபிரதேசத்தில் ஆப்பிரக்க இளைஞர்கள் மீது நூற்றுக்கணக்கான மக்கள் இனவெறி தாக்குதல் நடத்தினார்கள். அதை பற்றி இன்னொரு வீடியோவில் சொல்லியிருக்கிறேன். description ல் லிங்க் போட்டிருக்கேன்.

நேற்று, பாரதீய ஜனதாவின் எம்.பி தருன் விஜய் அல் ஜசிரா தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அவரிடம் இந்த கேள்வியை கேட்கிறார்கள்.

ஏன் இந்தியர்களை இன வெறியர்கள் என்று சொல்கிறார்கள்?
வெளிநாட்டில் இருந்து நம் அழகான இந்திய நாட்டிற்கு வருபவர்கள் ஏன் இந்தியர்கள் இன வெறியர்கள் என்று நினைக்கிறார்கள்?
என்ற கேள்வியை கேட்கிறார்.

தருன் விஜய் இவ்வாறு பதில் அளித்தார். ”நாங்கள் இனவெறியர்கள் என்றால் தமிழகம், கேரளம், கர்நாட்கா, ஆந்திர
மக்களோடு நாங்கள் எப்படி வாழ்வோம். அங்கு கறுப்பு மக்கள் தான் இருக்கிறார்கள். எங்களை சுற்று கறுப்பு மக்கள் தான் இருக்கிறார்கள்.” என்று பதில் சொன்னார்.

வட  இந்தியாவை ஒரு நாடாகவும், தென் இந்தியாவை வேறொரு நாடாகவும் தான் இவர் பார்க்கிறார் என்று தெரிகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக பெரிய விவாத பொருளாய் மாறியது.

தன் சொந்த நாட்டு மக்களுடன் ஒன்றாய் வாழ்வதை இவங்க என்னமோ தியாகம் செஞ்சி பெருந்தன்மையா வாழற மாதிரி சொல்லிக்கிறாங்க.

இது பிரிவினைவாத பேச்சு இல்லையா. எச்.ராஜா எங்கே இருக்கீங்க. இவர் anti national இல்லையா?

திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன், தமிழின் பெருமையை பரப்புகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த தருண் விஜய் அடிப்படையில் ஒரு இன வெறியர் என்பது தெரிந்து விட்டது.

தருண் விஜய் தன் இனவறி முகத்தை வெளியில் காட்டி விட்டார். இதே கருத்தை தான் பிற பிஜேபி தலைவர்களும்  தங்கள் மனதில் வைத்துள்ளார்கள்.

பாரதீய ஜனதாவின் உண்மை முகத்தை மக்கள் உணர வேண்டும்.
தங்கள் மதம், தங்கள் ஜாதி, தங்கள் இனம் மட்டும் தான் அவர்களுக்கு முக்கியம்.  பிற மக்களை அவர்கள் சிறுமையாக தான் பார்க்கிறார்கள்.

உத்திரபிரதேசத்தில் விவசாயிகளுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ள பிஜேபி அரசு டில்லியில் 25 நாட்களாக வறட்சி நிதி வேண்டும் என்று போராடிய விவசாயிகளை
லத்தியால் அடித்து துரத்தி இருக்கிறார்கள். அதையும் நம் கவனிக்க வேண்டும்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot