Monday, April 10, 2017

குற்றம் 23 - நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

இதுவரை நான் எந்த திரைப்படத்தை பற்றியும் பேசியதில்லை.
இதுவே முதல் முறை.

படத்தின் கதை பற்றி நான் பேச போவதில்லை. அதனால் பயம் இல்லாமல் நீங்கள் படிக்கலாம்.



இரண்டு தினங்களுக்கு முன்னர் குற்றம் 23 படத்தை பார்த்தேன்.
விறுவிறுப்பான திரைக்கதையில் கிடுகிடுவென படம் நகர்ந்தது.
அடுத்து என்ன நடக்குமோ என்று நம்மை யோசிக்க வைக்கிறார் இயக்குனர். அதுவோ இருக்குமோ, இதுவோ இருக்குமோ என்று படம் பார்த்தவர்கள் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசியதையும் பார்க்க முடிந்தது.

இறுதியில் மனதை தொடும் ஒரு கிளைமாக்ஸ். சமுதாயத்திற்கு ஒரு ஆழமான கருத்தை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு மையக்கருவை எடுத்துக் கொண்டு, அதை வைத்து ஒரு முழு நீள படத்திற்கான திரைக்கதையை எப்படி எழுதனும் என்று நாளைய இயக்குனர்களுக்கு அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நாலு பாடல், நாலு சண்டைக் காட்சி, நாலு காதல் காட்சி, நாலு காமெடி எல்லாத்தையும் சேர்த்து இது தான் படம் என்று சொல்லி நம்மையும் பார்க்க சொல்வார்கள். அந்த ரக படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.

சினிமா மிகவும் சக்திகரமான எந்திரம். அதை பயன்படுத்தி நல்ல கருத்துகளை மக்களிடம் சொல்லும் போது, சமுதாயத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும். அப்படி ஒரு படமாக இந்த குற்றம் 23 திரைப்படம் இருப்பது மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை நிச்சயம் பாருங்கள்.

படத்தை பற்றிய உங்கள் கருத்துகள பதிவு செய்யுங்கள்.
நன்றி. வணக்கம்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot