Tuesday, June 6, 2017

சரவண பவன் கேசரி|ஹோட்டல் கேசரி|கல்யாண கேசரி செய்வது எப்படி| வாங்க சமைக்கலாம்

தேவையான பொருட்கள்: ரவை - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 1/2 கப் ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்புன் உடைத்த முந்திரி - 8-10 கும்குமப்பூ - சிறிதளவு நெய் - 1-2 டேபில் ஸ்பூன் செய்முறை: 1) ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க விடவும். 2) 2 டேபில் ஸ்பூன் தண்ணீரில் கும்குமப்பூவை ஊற வைத்து, மீதி தண்ணீரை கேசரி கிண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். 3) மற்றொரு கடாயில் குறைவான தீயில் நெய்யை ஊற்றி ரவை மற்றும் முந்திரியை வறுக்கவும். 5) சுமார் 5-7 நிமிடங்கள் முந்திரி பொன்நிறம் ஆகும் வரை வறுக்கவும். 6) முந்திரி பொன்நிறம் ஆனவுடன், 1/2 கப் சுடு தன்ணீர் மற்றும் கும்குமப்பூ தண்ணீரை ஊற்றி ரவை கட்டி தட்டாமல் தொடர்ந்து கலறவும். 7) ரவை வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து சுருண்டு வரும் வரை கலறவும். 8) இறுதியாக ஏலக்காய் தூள் மற்று நெய்யை சேர்த்து, நெய் வெளிவரும் வரை கலறவும். 9) சூடான அல்வா போன்ற ரவா கேசரி ரெடி!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot