Monday, June 12, 2017

மோடியை நம்பி ஏமாந்து கண்ணீர் விட்ட பன்னீர்

பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து உத்தமர் ஆனார் பன்னீர்செல்வம். அதன் பிறகு தன் தர்ம யுத்தத்தை தொடங்கினார்.  ஊடகங்களும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிஜேபியும் முழு ஆதரவு கொடுத்தார்கள்.

பிஜேபியின் முழு ஆதரவு  பன்னீருக்கு இருந்தது. சசிகலாவை சிறையில் தள்ளிய சுப்ரிம் கோர்ட் தீர்ப்பும் பன்னீருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தது, தேர்தல் கமிசன் இரட்டை இலையை முடக்கியதும் பன்னீருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தது. தேர்தல் கமிசன் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ததும் பன்னீருக்கு
ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததும் பன்னீருக்கு ஆதரவாய் இருந்தது. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற வழக்கை போட்டு, 45 நாட்கள் சிறையில் தள்ளியதும் பன்னீருக்கு ஆதரவாய் இருந்தது.

பிஜேபி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் கமிசன், சுப்ரீம் கோர்ட், வருமான வரி துறை, சிபிஐ, டெல்லி போலீஸ் அனைவரும் பன்னீருக்கு ஆதரவாய் செயல்பட்டார்கள். அப்படி இருந்தும் 4 மாதங்களில் வெறும் 12 எம்.எல்.ஏக்களை மட்டுமே பன்னீரால் தன் பக்கம் இழுக்க முடிந்தது.

இது பிஜேபியை யோசிக்க வைத்தது.  நெருக்கடிகள் அதிகளவில் இருந்த போதும் எடப்பாடி தலைமையிலான அணியில் இருந்து எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் தாவவில்லை. அந்த அளவிற்கு எடப்பாடி அவர்களை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
இது போதாதுனு, தினகரன் வெளியில் வந்ததும் தன் ஆட்டத்தை தொடங்கி விட்டார். தனக்கு 32 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாய் காட்டி விட்டார். பன்னீரா எடப்பாடியா என்று பேசிய ஊடகங்கள், தினகரனா எடப்பாடியா என்று பேச தொடங்கி விட்டது.

இதனால் பன்னீரின் மவுசு குறைந்து விட்டது. 4 மாதங்களாய் ஜெயலலிதா மரணத்தை மட்டுமே பிரதானமாய் வைத்து தர்ம யுத்தம் செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கும் சலித்து போய் விட்டது. பன்னீருக்கு ஆதரவும் குறைந்து விட்டது.

அதனால் தான் பிஜேபி தன் அடிமையை மாற்றி விட்டார்கள்.
பன்னீரோ, எடப்பாடியோ தமக்கு அடிமையை இருந்தால் போதும் என்று முடிவுக்கு வந்த பிஜேபி தங்கள் முழு ஆதரவையும் எடப்பாடிக்கு கொடுக்கு தொடங்கி விட்டார்கள். இரு அணிகள் இணைந்த பிறகும், எடப்பாடியே முதல்வராய் தொடரட்டும் என்று மோடி முடிவு செய்து விட்டார்.

அதனால் விரக்தி அடைந்த பன்னீர் எடப்பாடி தரப்புடன் பேசுவதற்கு அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவை ரத்து செய்து விட்டார். இரு அணிகளும் இணைய கூடாது என்பதே மக்கள் விருப்பம் என்று கூறினார்.

பல மாதங்கள் முன்னாடியே ஒரு வீடியோவில் நான் சொல்லியிருந்தேன். பிஜேபியை நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அவர்கள் கைவிட்டு விட்டால், பன்னீருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்று சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட அப்படி ஒரு சுழ்நிலை தான் இப்போது நிலவுகிறது.

பன்னீரின் கதை என்னவாகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot