Friday, June 2, 2017

பிரபஞ்ச ஈர்ப்பு விதியை புரிய வைக்கும் கதை - இரண்டு ஓநாய்கள்

ஒரு பெரியவர் தன்னுடைய பேரனுக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொடுக்கிறார்.

அனைவருக்கும் தங்கள் உள்ளே ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது - பெரியவர் பேரனிடம் சொல்கிறார்.

அது இரண்டு ஓநாய்களுக்குள் நடக்கும் பயங்கரமான யுத்தம்.

ஒன்று கெட்ட ஓநாய்.

கோபம், பொறாமை, வருத்தம், ஆணவம், தற்பெருமை, தாழ்வு மனப்பான்மை, பொய்,
ஆகிய குணங்களை கொண்டது.

மற்றொன்று நல்ல ஓநாய்

ஆனந்தம், மன அமைதி, அன்பு, நம்பிக்கை, பொறுமை, தன்னடக்கம், உண்மை,
நேர்மை ஆகிய குணங்களை கொண்டது.

இந்த சண்டை உனக்குள்ளும் நடக்கிறது. அனைவருக்குள்ளும் நடக்கிறது.

பேரன் ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு தன் தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

எந்த ஓநாய் வெல்லும்?

அதற்கு தாத்தா பதில் அளித்தார்.

நீ எதற்கு உணவு அளிக்கிறாயோ அதுவே வெல்லும்.

நாம் வெல்ல வேண்டிய யுத்தம் எது? | வாழ்க்கையை புரிய வைக்கும் கதை|

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot