Monday, January 9, 2017

ஜல்லிக்கட்டு பேரணிக்கு பிறகு மத்திய அரசு அதிர்ச்சி உத்தரவு

மே மாதம் 2014ஆம் ஆண்டில், சூப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள்.
8 ஜனவரி 2016 இல், மத்திய அரசு அரசானை வெளியிட்டது. “காட்சிப்படுத்த கூடாத
விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குகிறாம். அதனால் ஜல்லிக்கட்டிற்கு தடை இல்லை” என்று சொன்னார்கள்.

உடனடியாக வெளிநாட்டு கைகூலியான விலங்குகள் நல வாரிய சங்கம் PETA பீட்டா
வழக்கு போட்டார்கள். சூப்ரிம் கோர்ட் அரசானை செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. ஜல்லிக்கட்டு நடத்தவில்லை.

இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
அடுத்த பொங்கலே வர போகிறது.
ஒரு வருட காலம் ஓடி விட்டது. முறைப்படி சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டின் தடையை நீக்கியிருக்கலாம்.
ஆனால் செய்யவில்லை. இப்போது இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது. அவசர சட்டம் கொண்டு வருவது தான் ஒரே வழி.
மத்திய அரசு கொண்டு வருமா?

இதை வலியுறுத்தி சேவ் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ‘கேர் அண்ட் வெல்பெர்’ எனும் அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
இதையடுத்து பேஸ்–புக், வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுத்தார்கள்.

இதை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை அன்று லட்சக்கணக்கில் இளைஞர்கள் கூடி  சென்னை மெரீனாவில்
மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.

கடலுக்கு அருகில் இளைஞர்கள் இன்னொரு கடலாக திரண்டது ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
மதம், ஜாதி, மொழி, கட்சி வாரியாக நம்மை பிளவுபடுத்தி நம்மை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது.
தமிழர்கள் தன்மானம் உடையவர்கள் என்பதை இளைஞர்கள் நிருபீத்தார்கள்.
அவர்களுக்கு நாம் எல்லாரும் தலை வணங்குவோம்.

வெறும் வாயிலேயே மொழம் போட்டு கொண்டு இருக்கும் பிஜேபியின் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோருக்கு
இந்த பேரணி ஒரு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும்.
நடப்பதை இளைஞர்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த பேரணி வெறும் ஆரம்பமே. தொடர்ந்து போராட வேண்டும்.
ஜனவரி 1 அன்று போராட்டம் தொடங்கி, ஜனவரி 15 இல் முடியும் போராட்டமாகி விட கூடாது.
இம்முறையும் மத்திய அரசு நம்மை ஏமாற்றினால், தொடர்ந்து போராட வேண்டும்.
போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும். இளைஞர்கள் மட்டுமின்றி, அனைவரையும் இந்த போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும்.

ஞாயிற்றுகிழமை போராட்டம் நடந்தது.
திங்கள் கிழமை மத்திய அரசு என்ன செய்தார்கள் தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்களின் கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி விட்டார்கள்.
பொங்கல் பண்டிகை இருந்தால் தானே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்வீர்கள்.
பொங்கல் பண்டிகையே இல்லாமல் செஞ்சிடுவோம் என்று மிரட்டுவது தெள்ளதெளிவாய் தெரிகிறது.

நம்மை மிரட்டும் மோடி அரசுக்கு எதிராக போராட வேண்டும்.
தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிராக போராட வேண்டும்

நம் விவசாயிகள் மடிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க போராட வேண்டும்.
கர்நாடகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு,மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுவிட்டது.
கேரளாவும் வறட்சிமாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
தமிழகம் ஏன் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படவில்லை?
ஏன் மத்திய அரசு தமிழர்களை புறக்கணிக்கிறது?

நாம் இந்தியன் என்பது சரி.
ஆனால், தமிழருக்கான அடையாளத்தை இழந்து, தமிழருக்கான தன்மானத்தை இழந்து இந்தியனாக இருக்க சொல்வதை ஏற்க இயலாது.
நம்முடைய ஆடையாளங்களை நாம் இழந்து விட கூடாது.
நம் தன்மானத்தை காட்ட வேண்டிய நேரம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை நம் தமிழ் நாளிதழ்கள் முதல் பக்க செய்தியாய் வெளியிட்டார்கள்.
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் மாபெரும் பேரணியை
முதல் பக்க செய்தியாய் வெளியிடவில்லை. இது ஏன் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகாவும் மதிக்கவில்லை.
மத்திய அரசும் மதிக்கவில்லை.

நாம் ஏன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும்?
இம்முறை தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
நாம அனைவரும் நாம் ஆதரவை அளிக்க வேண்டும்.

ஒன்றினைவோம். நம் ஒற்றுமையால் நம் அடையாளத்தையும், பண்பாட்டையும் காப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot