Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க சதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க சதி

தயவு செய்து இந்த ஆடியோவை முழுமையா கேட்டுட்டு எல்லாருக்கும் share பண்ணுங்க.

சமூக வளைத்தளங்கள் மூலமா கூடி தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் மக்கள்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
அறவழியில் மிக கண்ணியமாக போராடுகிறார்கள்.
ஏராளமான பெண்கள் போராட்டக் களத்தில் இருக்கும் போது, ஈவு இரக்கமில்லாமல் காவல்துறை மின்சாரத்தை துண்டித்தார்கள்.
அதன் மூலம், எல்லாரும் கலைந்து சென்று விடுவார்கள், போராட்டம் முடிந்து விடும் என்று கனவு கண்டார்கள். ஆனால் ஒருவரும் செல்லவில்லை.
அந்த இருள் சூழ்ந்த போராட்டக் களத்தில், பெண்கள் பயமின்றி இருந்தார்கள்.
தமிழர்களின் கன்னியத்தை உலகம் அறிந்தார்கள்.

போராட்டத்தில் இருக்கும் மக்களுக்கு சொந்த உறவினர் போல உணவு பொட்டலம், தண்ணீர் வழங்கினார்கள்.
இயற்கை உபாதையை கழிக்க உதவியாக, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டை திறந்தே வைத்திருந்தார்கள்.
இளைஞர்களே மனித சங்கிலி அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.
முழுக்க முழுக்க அற வழியில் நேர்மையாய் போராடி வருகிறார்கள்.

எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் வேண்டாம், அவர்கள் போராட்டக் களத்திற்கு வர வேண்டாம்
என்று திட்டவட்டமாக சொல்லிட்டாங்க.

இது அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் எரிச்சலையும், கோபத்தையும் கொடுத்திருக்கிறது.
“மக்களுக்கு தேவையானதை அவங்களே போராட்டம் பண்ணி வாங்கிக்கிட்டா, நமக்கு எவன்
ஓட்டு போடுவான்” என்று நடுங்குகிறார்கள்.

இந்த போராட்டம் வெற்றி அடைஞ்சிட்டா, நாளைக்கு காவிரி பிரச்சனக்கு போராடுவாங்க,
விவசாயி பிரச்சனைக்கு போராடுவாங்க, மதுவிலக்கு வேண்டும் என்று போராடுவாங்க அப்படின்ற
பயம் எல்லா கட்சிகளுக்கும் வந்து விட்டது. தட்டி கேக்க ஆரமிச்சிட்டா, ஈஷ்டம் போல ஊழல் செய்ய முடியாதே.
லஞ்ச லாவன்யத்தில் ஈடுபட முடியாதே அப்படின்ற கவலை அவங்களுக்கு.

அதனால், அவங்க சில சூழ்ச்சிகள் மூலமா இந்த போராட்டத்தின் வீரியத்தை குறைத்து, பின் போராட்டத்தை
முடித்து விட பார்க்கிறார்கள். சிலவற்றை பார்ப்போம்.

1) சென்னயில் தீய சக்திகள் சில பேர் காவல்துறையினர் மீது தண்ணீர் பாக்கெட்டை தூக்கி அடிச்சாங்க.
அதனால், அங்கு போலீஸ் தடியடி நடத்தினார்கள். இதன் மூலம் கலகம் ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கன்னியம் காத்ததால், போலீசாரை திருப்பி தாக்கவில்லை.
அதனால், தீய சக்திகளின் திட்டம் தோல்வியடைந்தது.

2) மதுரையில் ஒரு இளைஞர் ஒரு கட்டிடத்தின் மேலே போய், எல்லை சுவர் மேல் நின்று கொண்டு
தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். கிட்டத்ட்ட அரை மணி நேரம் அவர் அங்கேயே நின்று
மிரட்டி கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை வன்முறையில் ஈடுபடு வைக்கலாம்.
அதை காரணமாய் வைத்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விடலாம் என்று தான் திட்டம்.
ஆனால், இளைஞர்களும் மக்களும் உணர்ச்சிவச படாமல், அந்த சூழ்நிலையை சரியாக எதிர் கொண்டார்கள்.

3)இன்னொரு பகுதியில் நான்கு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள்.
அவர்களை மக்கள் காப்பாற்றி விட்டார்கள். அங்கிருக்கும் மக்களை உணர்ச்சிவசப்பட வைச்சி
வன்முறை செய்ய வைக்கனும்னு நினைச்சாங்க. ஆனா மக்கள் உணர்ச்சிவச படாமல், நிதானமாக அகிம்சை வழியில் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

4)அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 230 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில்
அடைக்கிறார்கள். உங்களை விடுதலை செய்கிறோம். திரும்பவும் போராட்ட இடத்திற்கு செல்லாமல்,
களைஞ்சி போயிடனும்னு அவர்களை மிரட்டி இருக்கிறார்கள். ஆனால், அப்படி செய்ய முடியாதுனு சொல்லிட்டு,
அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களிடம் சமாதானம்
பேச, காவல்துறை சீமானையும், அமீரையும் அனுப்பி வைச்சாங்க. அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை
கைவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

எந்த அரசியல் கட்சியும் நெருங்க வேண்டாம் என்று இளைஞர்கள் சொன்ன பிறகும், காவல்துறை ஏன்
நாம் தமிழர் கட்சியின் சீமானையும், அமீரையும் உள்ளே அனுப்பினார்கள்.
உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்திருந்தால், அரசுக்கு மிக பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
ஏன் அரசுக்கு நாம் தமிழர் கட்சி உதவினார்கள் என்ற கேள்வியும் எழுகிறதே?


5)பிஜேபிகாரங்க மத ரீதியா பிளவு ஏற்படுத்தி போராட்டத்தை களைக்க முயற்சி பண்றாங்க.
விடுதலை சிறுத்தைகள் ஜாதி ரீதியா பிளவு ஏற்படுத்தி போராட்டத்தை களைக்க முயற்சி பண்றாங்க.
போராடுரவங்க என்ன மதம், என்ன ஜாதி என்று யாருக்கும் தெரியாது.
அந்த ஒற்றுமை என்றுமே இருக்க வேண்டும். இந்த தீய சக்திகளின் சூழ்ச்சியில் விழுந்து விட கூடாது.

6) புதன் மாலை ஒரு அறிவிப்பு வெளிவருகிறது.
சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று அந்த கல்லூரிகளின் நிர்வாகங்கள்
அறிவிக்கிறார்கள். இதற்கு பின்னாலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது.

தமிழகம் முழுக்க போராட்டம் நடந்தாலும் கூட, பெரும்பாலான ஊடகங்களின் பார்வை
சென்னை போராட்டத்தின் மீது தான் இருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும்
அங்கு தான் இருக்கிறது. அது அரசுக்கு பெரிய நெருக்கடியை தருகிறது.

கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை என்பதால், அவங்களை ஹாஷ்டலில் இருக்க கூடாது என்றூ சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இருக்க இடம் இல்லாம, உண்ண உணவு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
அதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கல்லூரி மாணவர்கள் தான் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அவர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டால் போராட்டம் நீர்த்து போகும். தோல்வி அடையும்
என்பது அரசாங்கத்தின் கனவு.

ஆனால் அந்த கனவு பலிக்காத வகையில் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்லூரி ஷாஸ்டல் மாணவர்களின் உடைமைகளை பாதுகாக்க வைக்கவும், அவர்களுக்கு
உணவு அளிக்கும் கடமையும் நமக்கு உண்டு.

இந்த மாதிரி இன்னும் நிறைய சூழ்ச்சிகளை அவர்கள் செய்வார்கள்.
சூழ்ச்சியின் மூலம் இத்தனை நாட்கள் போராடியது வீணாக கூடாது.
நம்முடைய பலம் நம் ஒற்றுமை. ஒற்றுமையாக இருந்து தமிழனத்தின் உரிமையை மீட்போம்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot