Wednesday, January 11, 2017

யார் அடுத்த ஜெயலலிதா? சசிகலாவா, தீபாவா?

சசிகலாவால் ஜெயலிதாவாக முடியுமா?
யார் அடுத்த ஜெ? சசிகலாவா, தீபாவா?

தயவு செய்து முழு வீடியோவையும் பாருங்கள். நன்றி.

கங்கா சந்திரமுகி ரூமுக்கு போனா.
கங்கா சந்திரமுகியா நின்னா.
கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சிக்கிட்டா.
கங்கா சந்திரமுகியாவே மாறிட்டா.
இது சந்திரமுகி படத்தில் வரும் வசனம்.

இந்த வசனம் சசிகலாவிற்கும் கன கச்சிதமாக பொருந்தும்.
ஜெயலலிதா போலவே தலையில் கொண்டை வைக்கிறார். ஜெயலலிதா போலவே பால்கனியில் இருந்து கை அசைக்கிறார்.
ஜெயலலிதா போலவே செருப்பு அணிகிறார், செருப்புக்கு சாக்ஸ் அணிகிறார். ஜெயலலிதா போலவே பேச முயற்சிக்கிறார். போஸ் கொடுக்கிறார்.
ஜெயலலிதா போலவே கும்பிடு போடுகிறார்.

ஜெயலலிதாவின் வீட்டிலேயே தங்குகிறார்.
ஜெயலலிதாவின் காரையே பயன்படுத்துகிறார்.
ஜெயலலிதாவாக மாற துடிக்கிறார்.
ஆனால் மாற முடியுமா?
அது என்ன அவ்வளவு சுலபமா?

ஜெயலலிதா ஊழல்வாதி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், ஜெயலலிதா மீது
நம்பிக்கை வைத்து ஒட்டு போட பல கோடி மக்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவாக
வாழ்கிறார் என்று நம்பி எம்.ஜீ.ஆர் ரசிகர்களும் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்கள்.
ஆனால் இவர்கள் சசிகலாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா என்றால் மாட்டார்கள் என்று தான் தெரிகிறது.
காசு கொடுத்து முதல் கட்ட அதிமுக பிரமுகர்களை விலைக்கு வாங்க முடியும்.
ஆனால் அடி மட்ட தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாதே.

அவர்கள் சசிகலாவின் தலைமையால் அதிருப்தி அடைந்து தீபாவை அரசியலுக்கு வர வைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள்.
சசிகலாவிற்காக கூட்டம் கூட்ட, தலை ஒன்றுக்கு 300 ரூபாய் கொடுத்தார்கள் என்பதை படம் எடுத்து
காட்டி சில ஊடகங்கள் அவர்களின் வண்ட்வாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினார்கள்.
ஆனால் மறுபக்கம் தீபா வீட்டிற்கு தானாக கூட்டம் சேருகிறது.
இது சசிகலாவிற்கு ஒரு அச்சத்தை கொடுக்கிறது.  மக்கள் செல்வாக்கு இல்லாமல் முதலமைச்சர் ஆகலாம்.
ஆனால், மக்கள் ஆதரவு இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாதே.

அதனால், மக்கள் முன் அடிக்கடி முகத்தை காட்டி, தன் முகத்தை பரிட்சியபட்ட முகமாக்க முயற்சிக்கிறார்.
தினம் ஒரு கூட்டம் போயஸ் கார்டன் வந்து, சசிகலாவை தலைமை தாங்க கெஞ்சுவதாக போட்டோ வெளியிட்டு கொண்டிருந்தார்கள்.
எல்லாம் ஒரு மார்கெட்டிங்க் தான். டிவியில் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த பொருளை நாம் இன்றைக்கு வாங்க மாட்டோம். நாளைக்கும் வாங்க மாட்டோம்.
ஆனால், என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் வாங்குவோம். ஏனென்றால், தொடர்ந்து பார்ப்பதால், அந்த பிராண்ட் நம் மனதில் பதிந்து விடுகிறது.
அதை போல் தான் சசிகலாவையும் மக்கள் மனதில் பதிய வைக்க இவர்கள் இது போன்ற மார்கெட்டிங்கை செய்கிறார்கள்.
அதனால் தான் இந்தியா டூடே மாநாட்டில் பங்கேற்றார். இன்னும் நிறைய நிகழ்ச்சிகளில் வலம் வருவார்.

உஷாராய் இருக்க வேண்டும் மக்களே.
மன்னார்குடி மாவியாவிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

மன்னார்குடி மாவியா ஊழல் பெருச்சாலிகள் என்பது தெரியும்.
ஆனால் தீபா யார் என்றே நமக்கெல்லாம் தெரியாது.
அவர் மக்கள் நலனில் அக்கறை காட்டுவாரா என்று தெரியாது.
இதுவரை மக்களுக்காக அவர் என்ன செய்தார் என்று தெரியாது.

இவர் பின்னால் இருந்து ஆட்டுவிப்பது யார் என்பதும் தெரியாது.
1991 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஆடிய ஆட்டம் யாரும் மறந்திருக்க முடியாது.
அதனால், தீபாவிடம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.
இத்தனை வருடங்களாக அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?
அரசியலுக்கு வந்து விட்டால், அவர் வீட்டிற்கு வருமானம் எப்படி வரும்?
இதை எல்லாம் கண்டறிய வேண்டும். எனக்கு சசிகலா வேணாம். அதனால், தீபா வரனும்னு சொல்றது
சரியா என்பதை யோசிக்க வேண்டும். ஒரு தவறான முடிவு, தமிழகத்தை இன்னும் பல ஆண்டுகள்
சோகத்தில் மூழ்கடித்து விடும். சிந்தித்து செயல்பட வேண்டிய தருணும்.

நாட்டு மாடுகள் அழிவதற்கு பீட்டா மட்டும் தான் காரணமா.
தமிழக அரசும் தான் காரணம். மாறி மாறி ஆண்ட ஜெயலலிதாவும் கருணாநிதியும் தான் காரணம்.
நாட்டு மாடுகளை காப்பதற்கு இவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழ்க அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நாட்டு மாடுகள்
அடி மாடுகளாக ஆனது. இந்த தீய செயல்களை அனுமதித்தது ஜெயலலிதாவும் கருணாநிதியும் தானே.
இவர்கள் தமிழக மக்களையும் காக்கவில்லை. மாடுகளையும் காக்கவில்லை.

ஜெயலலிதா உயிருடன் இல்லை.
கருணாநிதி அரசியலில் இல்லை. இந்த வெற்று இடங்களை கவனமாக சிந்தித்து நிரப்ப வேண்டும்.
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு  சரியானதாக இருக்க முடியாது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot