Thursday, January 12, 2017

”தமிழர்கள் பொறுக்கிகள்” - பிஜேபியின் சுப்ரமணியசுவாமி

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசை அவசர சட்டம் கொண்டு வர சொன்னார்கள்.
சுப்ரீம் கோர்டில் தீர்ப்பு வந்த பிறகு தான், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்று சொன்னார்கள்.
பொங்கலுக்கு முன்னாடி தீர்ப்பு வழங்க முடியாது என்று இன்னிக்கு சூப்ரீம் கோர்ட் கூறியது.
போன வருடம், பீட்டாவின் மனுவை அவசர அவரமாக விசாரிச்சு இதே சுப்ரீம் கோர்ட்டு தானே ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டாங்க?
அப்ப அவசரம் காட்டுனாங்க. இப்ப அமைதியா இருக்காங்க.

காளைக்கு பதில் சிங்கத்தை அடக்குவீங்களானு முறையற்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேக்கறார்?
ஜல்லிக்கட்டு விளையாடியே ஆகனுமனா வீடியோ கேம்ல விளையாடுங்கணு சொல்றார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முதுக்கெலும்பு இல்லாதவர்கள் என்று தெளிவாய் தெரிகிறது.
நீதித் துறையும் ஆளுங்கட்சியின் கைகூலிகளாக தான் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது, நமக்கு நீதி எப்படி கிடைக்கும்?

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவோம்
என்று கூறுகிறார்கள் Animal welfare board மற்றும் பீட்டா.
இவங்களுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எப்படி உடனடியா விசாரிச்சு தீர்ப்பு கொடுக்கறாங்களோ?
இது ஒரு வெக்கக்கேடு.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட் தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டை நடத்தினார்கள்.
இன்னும் சில அமைப்புகளும் ஜல்லிக்கட்டை நடத்தினார்கள்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
எந்த பிரச்சனைக்கும் இந்த அளவுக்கு தமிழ் நாட்டில் போராட்டங்கள் நடந்ததில்லை.
இப்போது நடக்கும் போராட்டங்களை முன்னெடுப்பது கட்சிகள் அல்ல. மக்கள் தான்.
ரூபாய் நோட்டு செல்லாத திட்டத்தால் பாதிப்பு இருந்தாலும், நமக்கு ஏன் வம்பு என்று தமிழர்கள் அமைதியாக இருந்தார்கள்.
எங்க பணத்திலு கைய வச்சீங்க, சும்மா இருந்தோம். எங்க பண்பாட்டுல கைய வச்சா சும்மா இருக்க மாட்டோம்
என்று வீரமாய் போரட்டத்தில் குதித்தார்கள் வீர தமிழர்கள்.

தமிழர்கள் வீதியில் இறங்கி போராடியது மோடி அரசுக்கு பயத்தை தந்தது.
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தியது அவர்களுக்கு நடுக்கத்தை தந்தது.
பொஙகலுக்கு விடுமுறையே இல்லை என்று மிரட்டினார்கள். பலத்த எதிர்ப்பு வந்ததால், விடுமுறை உண்டு
என்று அந்தர் பல்டி அடித்தார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்தினால், தமிழகத்தில் குடியரசு தலைவர்
ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று இன்று கூறினார் சுப்ரமணியசுவாமி.

இதற்கு டிவிட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா மதிக்கலை. தண்ணீர் திறந்து விடல. அங்க ஜனாதிபதி ஆட்சியை அமைக்க நாதி இல்லை.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசும் மதிக்கலை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலை.
அப்ப எல்லாம் இந்த நபர் ஏன் நீதியை காக்க முன் வரலை?

கர்நாடக்த்தில் தண்ணீயே இல்லை. அவா தண்ணீர் தர மாட்டா. நீங்க கடலில் இருந்து தண்ணி எடுத்துக்கோங்கோ.
யார் உங்களை தடுத்தா என்று நெக்கலாக அப்போது பதில் சொன்னவர் தான் இந்த சுவாமி.

தமிழ்நாட்டிற்கு மட்டும் தவறாமல் துரோகம் இழைப்பதை தன் கொள்கையாகவே வைத்துள்ளார்
தமிழ்நாட்டின் பெயரையே கெடுக்கும் இந்த சுவாமி.

இவரை கண்டித்து இவரின் உருவபொம்மையை மதுரையில் எரித்தார்கள்.
கடும் எதிர்ப்பு வந்ததால், மீண்டும் ஒரு டிவிட் செய்தார்.
தமிழ்நாட்டில் இருக்கும் பொறுக்கிகள் விளம்பரத்திற்காக என்னை எதிர்க்கிறார்கள் என்று சொன்னார்.
மறுபடியும் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஒரு கல்யாண வீட்டிலை இவரை பெரிய மனுசன்னு மதிச்சு, தாலி எடுத்து கொடுக்க சொல்றாங்க.
ஆனா, இவர் பொன்னுக்கே தாலி கட்ட போயிட்டாரு.
இவரு தமிழர்களை பொறுக்கிகள்னு சொல்றாரு. என்ன கொடுமைல.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இவரை எட்டப்பன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
தமிழர்களை பொறுக்கிகள் என்று அநாகரிகமாய் திட்டும் இவரெல்லாம் ஒரு எம்.பி. என்ன ஒரு கேவலம்ல?
இவர் வெறும் அம்பு தானே. ஏவியது யார்?
இவரை எம்.பி ஆக்கியது யார்?
மோடி தான். வேற யாரு.
நம் எதிரி யார் என்று இப்போதாவாது தெளிவாய் தெரியுதா?

”ஜல்லிக்கட்டுக்காக நானும் போராட தயார். ஆனால் மத்திய அமைச்சர் என்பதால் போராட முடியாது”
என்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

”தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக பா.ஜ.க ஆதரவு அளிக்கும்” என்கிறார் தமிழிசை சவுந்திரராஜன்.

“தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால், தமிழகத்தில் குடியரசு தலைவர்
ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார் சுப்ரமணியசுவாமி.

இரட்டை வேடம் போடுவதில் சினிமா நடிகர்களையே மிஞ்சி விட்டார்கள் பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள்.
இவர்கள் தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கிறார்கள்.
அதை பூஜ்யமாக்கி, இந்த கட்சியை தமிழ்நாட்டை விட்டு துரத்தினால் தான், இவர்கள் திருந்துவார்கள்.

சுப்ரீம் கோர்ட் கை விரித்து விட்டது.
மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவது தான் ஒரே தீர்வு.
கொண்டு வரவில்லை என்றாலும், தடையை மீறி இம்முறை ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும்.
அதற்கு நம் முழு ஆதரவை அளிப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot