Monday, December 25, 2017

கல்யாண பந்தி கேரட் முட்டைகோஸ் பொரியல்

கல்யாண பந்தியில் கேரட் முட்டை கோஸ் பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா? அருமையாக இருக்கும். வீட்டிலும் அதை போல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கீங்களா. அதை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறோம். தவறாமல் பாருங்கள்.



தேவையான பொருட்கள்:
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பூண்டு - 2-4 பல்
எண்ணெய் - 1-2 மே.கரண்டி
உப்பு - தேவைக்கு
கேரட்- 2
முட்டைகோஸ்- 2-3 கப்
தேங்காய், துறுவியது- 2-3 மே.கரண்டி
காய்ந்த மிளகாய்- 1-2
கருவேப்பிலை - சிறிது

செய்முறை:
1. ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.
2.பிறகு நறுக்கிய பூண்டு சேர்த்து சில விநாடிகள் வதக்கவும்.
3. வதங்கியதும் நறுக்கிய கேரட், முட்டைகோஸ், உப்பு சேர்த்து கலக்கவும்.
4. மிதமான தீயில் கடாயை மூடி சுமார் 7-10 நிமிடம் காய்களை  வேகவிடவும். இடையில் கிலறவும்.
5. பின்பு காய்கள் வேந்தவுடன், துறுவிய தேங்காய், கைகளால் நொறுக்கிய சீரகம் சேர்த்து கலக்கவும்.

சுவையான கேரட் முட்டைகோஸ் பொறியல் தயார்!

1 comment:

Post Top Ad

Your Ad Spot