Friday, December 1, 2017

வழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின்   காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வழவழப்பு இல்லாமல் வெண்டைக்காய் பொரியல் செய்ய முடியும். சுவை மற்றும் சத்து மிகுந்த வெண்டைக்காய் பொரியல் தயார் செய்யும் முறை பற்றி இந்த வீடியோவில்  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4-6 பல்
வெங்காயம் - 1
வெண்டைக்காய் - 1/4 கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
தக்காளி - 1

செய்முறை:
1) ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
2) பிறகு பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3) வதங்கியதும் நறுக்கின வெண்டைக்காய், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சுமார் 3-5 நிமிடம் நன்கு வதக்கினால் பிசுபிசுப்பு போகும்.
4) கடைசியில் மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கின தக்காளி சேர்த்து கிலரி 5 நிமிடம் கடாயை மூடி தக்காளியை வேகவிடவும்.
5) தக்காளி வெந்ததும், நீர் சுண்டி தொக்காகும் வரை வதக்கி எடுக்கவும்.

சுவையான சூப்பரான பிசுபிசுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் தயார்.

வெண்டைக்காயின் பலன்கள்:

1) வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக் காரணம் அதில் இருக்கும் gum மற்றும் pectin. இவையிரண்டும் சொல்யுபில் பைபர் (soluble fiber) அதாவது கரையக் கூடிய நார்சத்து. இவை சீரம் கொலஸ்ட்ரால்(serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றன. வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் (insoluble fiber) அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.

2) வெண்டைக் காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.

3) வெண்டைக் காயில் இருக்கும் கோந்து (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான கறிகாய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ( மேல் அடிக் காம்புகளை நீக்கிவிட்டு)ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

1 comment:

  1. This is amazing article and very useful Website for Veg and non veg cooking recipes below link to click here CLICK HERE TO GO

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot