Friday, December 15, 2017

எதிர்மறை எண்ணங்களை மாற்றுவது எப்படி

ஒரே ஒரு எதிர்மறை எண்ணம் ஒருவன் வாழ்க்கையை முழுமையாக சிதைத்து விடும். எதிர்மறை எண்ணங்கள் அவ்வளவு வலிமையானவை. எதிர்மறை எண்ணங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதை எப்படி கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்கான கடுமையான விளைவுகளை நீங்கள் நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.

எல்லா பூட்டுகளுக்கும் கண்டிப்பாக ஒரு சாவி இருக்கிறது. ஆனால் சவாலான விசயம் என்னவென்றால், சரியான சாவியை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டும். அதே போல், உங்களின் எதிர்மறை எண்ணங்களை கையாள நீங்கள் முறையான ஒரு வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் உங்களின் எதிர்மறை எண்ணங்களை வெட்டி, நேர்மறை எண்ணங்களை வளர்த்து விடலாம். உங்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழலாம்.

இந்த வீடியோவில் எதிர்மறை எண்ணங்களை
மாற்றுவது எப்படி, எதிர்மறை எண்ணங்களை கையாள்வது எப்படி, எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாய் மாற்றுவது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறேன். திடீர் என்று தோன்றும் இனம் புரியாத சோகம், வலி, வருத்தம் ஆகியவற்றை எப்படி துரத்துவது என்பது குறித்தும் இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்.
மறக்காமல் இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்கு பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot