Sunday, December 17, 2017

உன்னால் ஜெயிக்க முடியும் தோழா

என்னால் இதை செய்ய முடியுமா? என்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியுமா? என்னால் பணக்காரன் ஆக முடியுமா? என்னால் தைரியமாக பேச முடியுமா? என்னால் ஒரு பிசினஸை வெற்றிக்கரமாக நடத்த முடியுமா? என்னால் மக்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியுமா?

இன்னும் ஏராளமான “முடியுமா” கேள்விகளை உங்களுக்குள் நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களால் முடியவில்லை என்றால், வேறு யாரால் முடியும்? ஆதிவாசிகளாய் இருந்த நாம், இன்று நாகரீகமாய் வாழ்கிறோம்? எப்படி இது சாத்தியமானது?
உங்களின் நம்பிக்கை, உங்களின் மன தைரியம், உங்களின் விடாமுயற்சி ஆகியவை தான் இதை சாத்தியமாக்கியது.

உங்களுக்குள் இருக்கும் சக்தி இப்போது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதை  நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சக்தி உங்களின் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை புகழின் உச்சியில் கொண்டு சேர்க்கும். செல்வத்திலும், மன அமைதியுலும் உங்களை பணக்காரன் ஆக்கும். அந்த சக்தி ஆழ்மனதின் சக்தியை உணர வைக்கும். அந்த சக்தி பிரபஞ்சத்தின் சக்தியை உணர வைக்கும்
அந்த அபார சக்தியை உணர முடியவில்லையா? கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.



மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot