Tuesday, May 23, 2017

உடல் எடையை வேகமாக குறைக்கும் சுவையான கொள்ளு துவையல் செய்வது எப்படி? | வாங்க சமைக்கலாம்

தேவையான பொருட்கள்: 
1) கொள்ளு - 1/2 கப்
2) புளி - எலுமிச்சை அளவு

அரைப்பதற்கு:
3) தக்காளி - 1
4) பூண்டு - 2-4
5) சீரகம் - 1/2 டீஸ்புன்
6) தனியா - 1 டீஸ்புன்
7) மிளகு - 1 டீஸ்புன்

தாளிப்புக்கு:
8) சமையல் எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
9) கடுகு - 1 டீஸ்புன்
10) சீரகம் - 1/2 டீஸ்புன்
11) காய்ந்த மிளகாய் - 1-2
12) கருவேப்பிலை - சிறிதளவு
13) பெருங்காயம் - சிறிதளவு
14) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்புன்
15) சக்கரை/வெள்ளம் - சிறிதளவு
16) உப்பு - தேவையான அளவு
17) கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
1) கொள்ளை 4-6 மணி நேரம் அல்லது முந்தைய இரவு ஊற வைகக் வேண்டும்.

2) பிரஷர் குக்கரில் 3 விசில்  வரும் வரை வேக விடவும்.  பிறகு தண்ணீரை வடிகட்டவும். (வெந்த கொள்ளை தொகையல் செய்யலாம்)

3) கொள்ளு வேக வைத்த நீரில் புளியை ஊற வைத்து, சாரை எடுத்து வைக்கவும்.

4) பூண்டு, சீரகம், தனியா, மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.

5) நன்றாக அரைந்தவுடன் தக்காளியை சேர்த்து அரைக்கவும்

6) அரைத்த  விழுதுடன் புளிச்சாரை சேர்க்கவும்.

7) சுடான பாத்திரத்தில் எண்ணெய் கொதித்தவுடன், கடுகு சீரகத்தை போட்டு வெடிக்கவிடவும்.

8) பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.

9) கொள்ளு தண்ணீர் கலவையை சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

10) ரசத்தை கொதிக்க விடவும். பிறகு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

11) கொத்தமல்லியை சேர்த்து, சூடான ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot