Thursday, May 18, 2017

செரலாக்கில் சுவையான குலோப் ஜாமுன் | வாங்க சமைக்கலாம்

செரலாக் குலோப் ஜாமுன் செயது எப்படி?

ஜாமுன் உருண்டைகளுக்கு:

செரலாக் -  4 டேபில் ஸ்பூன்
வெள்ளை பிரட் - 1 ஸ்லைஸ்
பால் - 1/4 கப்
எண்ணெய் - பொறிப்பதற்கு

சர்க்கரை பாகு:
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் - 1
கும்குமப்பூ - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்புன்


சர்க்கரை பாகு செய்முறை:
1) ஒரு பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.
2) கும்குமப்பூ, ஏலக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.

ஜாமுன் உருண்டைகள் செய்முறை:
1) ஒரு பாத்திரத்தில் செரலாக்குடன் கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து கலக்கவும்..
2) மீதம் உள்ள பாலில் பிரட் தூண்டுகளை தோய்த்து, பிழிந்து செரலாக் கலவையுடன் கலக்கவும்.
3)ஒரிரு நிமிடங்கள் கலவை ஒன்று சேரும் வரை பிசையவும்.
4) சிறிதளவு எண்ணெயை கையில் தேய்து ஜாமுன் உருண்டைகள் செய்யவும்.
5) எண்ணெய் கடாயில் மிதமான தீயில் ஜாமுன் உருண்டைகளை பொறித்து எடுக்கவும்.
6) பொறிக்கும் நேரத்தில், சர்க்கரை பாகை லேசாக சுடு செய்யவும்.
7) பொறித்த உருண்டைகளை சுடான சர்க்கரை பாகில் சேர்த்து 1-2 மணி நேரம் ஊற விடவும்.
8) நீங்கள் ரசித்து சாப்பிட சுவையான குலோப் ஜாமுன் தயார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot