Monday, May 8, 2017

15 நிமிடத்தில் சுவையான மோர் குழம்பு செய்வது எப்படி? | வாங்க சமைக்கலாம்

தேங்காய் விழுதிற்கு தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 2-4
இஞ்சி - 1-2 டேபில் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபில் ஸ்பூன்
தனியா - 1 டீஸ்புன்
சீரகம் -  1 டீஸ்புன்

குழம்பிற்கு தேவையான பொருட்கள்:
தயிர் - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்புன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்புன்
சீரகம் - 1/2 டீஸ்புன்
கருவேப்பிலை - 1 குச்சி/சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை:
1) பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், தனியா, சீரகம் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2) சுடான கடாயில் எண்ணெய் கொதித்தவுடன், கடுகு, சீரகம், காஞ்ச மிளகாய் ஆகியவற்றை போட்டு பொறியவிடவும்.  பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.
3) நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
4) அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இஞ்சியின் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
5) தீயை குறைத்து தயிரை சேர்க்கவும். நடுவில் ஒரு கொதி வரும் வரை மிக குறைவான தீயில் சமைக்கவும்.
6) தீயில் இருந்து எடுத்து இறுதியாக கலக்கவும்.
7) ருசியான மோர் குழம்பு தயார்.

Tips:
1) மோர் குழம்பு திரிந்து விட்டால், இறுதியில் தீயில் இருந்து எடுத்த பிறகு, சிறிதளவு தயிரை சேர்த்து கலக்கவும்.
2) மோர் குழம்பு திரிந்து விட்டால், ஒரு ஸ்புன் அரிசி மாவுடன் கால் டம்பளர் தண்ணீர் சேர்த்து, அந்த மாவு கலவையை   குழம்பில் ஊற்றி, மீண்டும் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot