Monday, July 17, 2017

ஜெயாவிற்கு உண்மையில் விஷம் வைத்தது யார்? திடுக்கிடும் தகவல்கள்

ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்ந்த ஒரிரு தினங்களில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி வேகமாய் பரவியது. அவர் போட்டோவை வெளியிட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தார்கள். சசிகலாவை கொலைக்காரி என்று திட்டவட்டமாய் சொன்னார்கள். நானும் விதிவிலக்கு அல்ல. நானும் தான் இதை செய்தேன். சசிகலாவை விமர்சித்து பல வீடியோக்கள் வெளியிட்டேன்.

ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது ஒட்டு மொத்த உண்மையும் மறைக்கப்பட்டு தவறான தகவல் திணிக்கப்பட்டதா என்று தோன்றுகிறது. பல வருடமாய் திட்டம் தீட்டி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒரு கருத்து திணிப்பு நடந்திருக்கிறதா என்றும் தொன்றுகிறது. அந்த எண்ணம் வருவதற்கு முக்கியமான கேள்விகள்.

 1) ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, சசிகலா கையில் தான் கட்சியும், ஆட்சியும் இருந்தது. எண்ணற்ற நிலங்களையும், சொத்துகளையும் அபகரிக்க முடிந்தது. கேள்வி கேட்க ஆள் இல்லையே. கங்கை அமரனிடம் இருந்து சிறுதாவுர் பங்களாவை பறிக்க முடிந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து கோடநாடு எஸ்டேட்டை பறிக்க முடிந்தது. பறிகொடுத்தவர்கள் ஜெயலலிதா இறக்கும் வரை வாய் திறக்கவில்லையே. சசிகலா தன் ஒட்டுமொத்த உறவினர்களையும் செல்வந்தர் ஆக்கினார். அப்படிப்பட்ட பொன் முட்டை இடும் ஜெயலலிதாவை சசிகலா கொன்று இருப்பாரா?

 2) ஜெயலலிதா மறைவிற்கு பின் முழு ஆதாயம் அடைந்து கொண்டிருப்பது யார்? கொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லாரும் பிஜேபி என்று சொல்வார்கள். ஜெயலலிதா மரணத்தில் பிஜேபிக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சொன்னவர்கள் வெகுசிலரே. அதில் நானும் ஒருவர். ஆனால் அந்த கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு சசிகலா தான் கொலைக்காரி என்று ஒட்டு மொத்த தமிழக மக்களையும் சிந்திக்க வைத்தது பிஜேபியின் திட்டமிட்ட செயலா என்ற கேள்வியும் எழுகிறது.

 3)ஜெயலலிதா இறந்த இரண்டே நாளில் அதே அப்பல்லோவில் சோ இறந்தார். பிஜேபி அபிமானியான ஆடிட்டர் குருமூர்த்தி உடனடியாக துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரனார். துக்ளக் பத்திரிக்கை படித்தவர்கள் கவனித்து இருப்பீர்கள். அவர் கட்டுப்பாட்டில் பத்திரிக்கை வந்த பிறகு, அவர் அதிகம் விமர்சித்தது சசிகலாவையும் அவர் குடும்பத்தினரையும் தான். ஜெயலலிதா இறந்த இரண்டே நாளில் நடந்திருக்கும் சோவின் மரணம் இயற்கை மரணம் தானா என்ற கேள்வியும் எழுகிறதே? சோ மரணத்திற்கு பிறகு, உடனடியாக குருமூர்த்தி கையில் துக்ளக் பத்திரிக்கை சென்றதும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறதே?

 4) சொத்து குவிப்பு வழக்கில் பிஜேபி ஜெயலலிதாவை மிரட்டினாங்க. ஆனால் அவர் பயப்படாமல் மத்திய அரசின் ஜிஎஸ்டி, நீட், உதய் திட்டம் ஆகியவற்றை எதிர்த்தார். மக்கள் செல்வாக்கு தான் ஜெயலலிதாவிற்கு தைரியம் கொடுத்திருக்கும் என்பது அவர் கூடவே இருக்கும் சசிகலாவிற்கு தெரிந்திருக்கும். ஜெயலலிதாவை கொன்று விட்டு, மக்களை ஒரு முறை கூட சந்திக்காத தன்னால் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக உருவாக முடியாது என்று அவருக்கு தெரிந்திருக்கும். மோடியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதும் சசிகலாவிற்கு தெரிந்திருக்கும். அப்படி ஒரு சுழ்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா கொன்று இருப்பாரா?

5) பிஜேபியின் மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தாலும், பிஜேபி அமைதியாய் இருந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் அவர் தங்களின் ஜாதிக்காரர் என்பதனால் தான். அந்த ஜாதியில் இல்லாத தன்னை மோடி எப்படி பந்தாடுவார் என்பதும் சசிகலாவிற்கு தெரிந்திருக்கும். அதனால், ஜெயலலிதாவை சசிகலா கொன்று இருப்பாரா?

6) ஜெயலலிதா 75 நாட்கள் அப்பால்லோவில் இருந்தார். சேர்ந்த ஒரிரு நாளில் சசிகலாவை எதிர்த்து விமர்சனங்கள் வர தொடங்கின. ஜெயலலிதா இறந்திருந்தாலும், உயிரோடு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பது போல் போட்டோசாப் செய்து புகைப்படத்தை சசிகலாவால் வெளியிட்டிருக்க முடியும். ஏன் அவர் வெளியிடவில்லை? என்பதும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. தன் மீது விமர்சனங்கள் அதிகளவில் வந்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதா எப்படி மக்களை பார்க்க விரும்புவாரோ அப்படி தான் பார்க்க வேண்டும் என்ற தன் முடிவில் சசிகலா உறுதியாய் இருந்தாரா? என்றும் கேளிவி எழுகிறது.

இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கிறது. திட்டமிட்டு உண்மையை நம்மிடம் மறைத்து தவறான தகவலை திணித்து இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தும். ஒரிரு தினங்களில் அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன். உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot